இங்கிலாந்து தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் மூடவுள்ளது.
தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் இன்று(திங்கட்கிழமை) முதல் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த PCR பரிசோதனையை மேற்கொள்ளாது பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்களுக்கு 500 ஸ்டேர்லிங் பவுண் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை தென் அமெரிக்க மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் பிரேஸில் பயணிகளுக்கு தடை விதித்தன.
இந்த நிலையிலேயே இங்கிலாந்திலும் குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த நடைமுறைகள் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.