பொலிஸ் மா அதிபர் நியமனம் - சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை - பிரதம நீதிபதியின் ஆலோசனைகளை பெறப்போவதில்லை என சபாநாயகர் தெரிவிப்பு
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சபாநாயகரினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் சட்டமா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன பின்பற்றவேண்டும் என சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனையை கோரிய நிலையிலேயே சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் முழுமையான ஆலோசனை அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இதனிடையே பொலிஸ் மா அதிபர் நியமனம் விடயத்தில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான ஆலோசனைகள் கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்
இந்த விவகாரம் தொடர்பில் பிரதம நீதிபதியின் ஆலோசனைகளை பெறப்போவதில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000