ஜனாதிபதி தேர்தல் - அலுவலகங்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கு பொலிஸ் உயரதிகாரிகள் நியமனம்
ஜனாதிபதித் தேர்தலில், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வதற்கும் தேர்தல் தொடர்பான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸார் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைவாக 22 மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கும் தலா 11 பொலிஸ் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் முறைப்பாடுகளை விசாரிப்பதற்கும் அலுவலகங்களின் செயற்பாடுகளை திறம்பட ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாக இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 10 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து தேர்தல் தொடர்பான மூன்று முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தல், சுவரொட்டி தொடர்பாக தகராறு , சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுதல் ஆகிய மூன்று சம்பவங்கள் குறித்தே இவ்வாறு முறைப்பாடு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000