பால் குடிக்க மறுத்தது குழந்தை - கைகால்களை திருகினேன் என யாழில் குழந்தையைக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையொன்று நேற்று உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வேளை, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை , தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை , உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
மன்பதாக குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு குழந்தை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் தாயார், மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸ் விசாரணையில் குழந்தை பால் குடிக்க மறுப்பதால், கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை குழந்தையின் தந்தையையும், குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னரே, நீதிமன்ற உத்தரவின் பேரிலையே குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000