Category:
Created:
Updated:
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் முதன் முறையாக இருதரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் (Sharjah) இடம்பெறவுள்ளன. ஆப்கானிஸ்தான் தொடருக்குப் பின்னர், அயர்லாந்துடன் 2 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் தென்னாபிரிக்க அணி பங்கேற்கவுள்ளது.
அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரின் முதலாவது இருபதுக்கு இருபது போட்டி செப்டம்பர் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000