·   · 149 news
  •  · 10 friends
  •  · 10 followers

பூநகரியில் 3 பிள்ளைகளின் தாய் கொலை- கணவன் கைது

 பூநகரி தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (17) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 37 வயதுடை ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்ப இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

0 0 0 0 0 0
  • 397
Comments (0)
Ads
Latest News
1-12
Ads
Ads
Info
Created:
Updated:
Featured News
Ads