Category:
Created:
Updated:
பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 19 பேர்வரை உயிரிழந்துள்ளதாகச் சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதன் காரணமாகப் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் காவல்துறைப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளப் பெறுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000