குஜராத் மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் சந்திபுரா வைரஸ்
குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சந்திபுரா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது.
குஜராத் மாநிலத்தில் மாத்திரம் கடந்த 2 வாரங்களில் இறந்த 6 குழந்தைகள், இந்த சந்திபுரா வைரஸ் தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என வைத்திய நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் இறப்புக்கு இந்த வைரஸ் தான் காரணமா என்பதை உறுதி செய்வதற்கு இரத்த மாதிரிகளைப் புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மணல் ஈக்கள் (Sandflies) மூலம் பரவும் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு 24 முதல் 48 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 44,000 இற்கும் அதிகமான மக்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000