சினிமா செய்திகள்
விஜய் மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் பதிலடி
தவெக மாநாட்டை தொகுத்து வழங்கியவர் துர்கா தேவி(28). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. விஜயின் ரசிகையாக இருந
மாநாட்டில் வேறு விஜய்யை பார்ப்பது போல் இருந்தது என தெரிவித்த நடிகை ராதிகா
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவ
ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
இணையத்தில் வைரலாகி வரும் ஸ்ரேயாவின் புகைப்படம்
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
கங்குவா எனக்காக எழுதின கதை - ரஜினிகாந்த்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாராகியுள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவே
'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன
டி. ராஜேந்தர் பாடல் வரிகளை வியந்த கண்ணதாசன்
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த ஒரு பாடலுக்கு கண்ணதாசன் வியந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பல்துறை வி
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
Ads
 ·   ·  1690 news
  •  ·  0 friends
  • 1 followers

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு புத்துயிர் அளிக்க நிதி வசதி பெக்கேஜ் !

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மீள வலுவூட்டும் நோக்கில், நுண், சிறு மற்றும் நடுத்தர முயற்சிகளுக்கான முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நிதி வசதிப் பெக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மானிய வட்டி விகிதத்தில் அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற விசேட வங்கிகள் உட்பட 15 நிதி நிறுவனங்கள் மூலம் நெருக்கடியை எதிர்கொண்டு செயற்படும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் செயற்பாடற்ற கடன் பிரிவின் கீழ் இருக்கும் நுண், சிறு மற்றும் மத்திய தொழில்முற்சிகளுக்காக ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய பிரதான இரு பிரிவுகளின் கீழ் இந்தக் கடன் வழங்கப்படும்.

அந்த நோக்கத்திற்காக, தொழில்துறை அமைச்சினால் நிதி உதவி தேவைப்படும் மற்றும் அவர்களின் வணிகங்களை மேலும் மேம்படுத்தும் திறன் கொண்ட தகுதியுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்படுத்தும் முதலீட்டுக் கடனின் கீழ், 10 வருட காலத்திற்கு 7% சலுகை வட்டி விகிதத்திற்கு உட்பட்டு, அதிகபட்சமமாக 15 மில்லியன் ரூபாய்க்கு உட்பட்டு கடன் வழங்கப்பட இருப்பதோடு இதற்காக 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. .

செயற்படாத கடன் பிரிவின் கீழ் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு மூலதனமாக 5 வருட காலத்திற்கு உட்பட்டதாக 8 வீத கடன் வட்டியின் கீழ் 5 மில்லியன் ரூபா கடன் வழங்கப்படுவதோடு அதற்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, டி.எப்.சி.சி வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, சனச அபிவிருத்தி வங்கி லிமிடெட், யூனியன் வங்கி, பான் ஆசியா வங்கி, கார்கில்ஸ் வங்கி ஆகியவை பங்கேற்பு நிதி நிறுவனங்களாக செயற்படும்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எந்தவொரு நாட்டையும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களைப் பலப்படுத்த வேண்டும்.

கடந்த பொருளாதார வீழ்ச்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களின் மீட்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான மூலதனத்தை வழங்குவதற்காக தேசிய அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று பாரிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொது மக்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தையும் விளக்கினார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட வணிகச் செயற்பாட்டு சூழலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் திறனை மேம்படுத்த இந்தப் புதிய கடன் திட்டம் உதவும்.

விவசாயம், சுற்றுலா, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் மற்றும் பெண்கள் தலைமையிலான நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (வர்த்தகம், குத்தகை மற்றும் வாடகை வணிகங்கள் தவிர்த்து) குறித்து இந்த கடன் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது மற்றும் பொருளாதாரத்தை இறக்குமதிப் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவது ஆகிய அரசாங்கத்தின் நோக்கத்தை அடையவும் இது உதவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

  • 535
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads