ஜனவரி.1 முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு - நேரில் சென்று கடவுச்சீட்டை பெறும் சாத்தியம் இல்லை என தெரிவிப்பு
இலங்கையர்களுக்கான புதிய, திறமையான மற்றும் பாதுகாப்பான இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டில், திணைக்களத்தின் கூடுதல் கட்டுப்பாட்டாளர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட புதிய முறையின்படி புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது மேற்படி https://www.immigration.gov.lk இல் முன் பதிவு இணைப்புகளை பெற்றக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் ஜூலை 16, முதல் நடைமுறைக்கு வரும். எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதம் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது நடைமுறையில் இருக்கும் முறை நாளை (18) வரை அமலில் இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவுக்குப் பிறகு, கடவுச்சீட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் முன்னுரிமை அடிப்படையில் பெறப்படும்.
முன்னர் ஒதுக்கப்பட்ட திகதி மற்றும் நேரம் இல்லாமல் திணைக்களத்திற்குச் சென்று கடவுச்சீட்டைப் பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்று மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000