Category:
Created:
Updated:
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 9 உறுப்பினர்களுடன் கடந்த வருடம் ஒக்டோபர் 15 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
அதன் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், 130 க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் கூடிய தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000