Ads
நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஓலி பதிவயேற்பு
நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சர்மா ஓலி (k.p.sharma oliver) இன்று (15) புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
அதன்படி, அந்நாட்டின் பிரதமராக சர்மா ஒலி நான்காவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார்..
நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் (Pushpa Kamal Dahal) பிரசண்டா தோல்வியை சந்தித்தார்.
இதையடுத்து, அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்த கே.பி.சா்மா ஓலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.
அதன்படி, ஜனாதிபதி ராம் சந்திர பவுடலால் (Ram Chandra Poudel), புதிய பிரதமராக சா்மா ஓலியை நேற்று (14) நியமிக்கப்பட்ட நிலையில், இன்று காலை உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்ள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads