Category:
Created:
Updated:
தேர்தலை ஒத்திவைப்பது தமது கட்சியின் கொள்கையல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மரதகஹமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற திவுலப்பிட்டி தொகுதி கூட்டத்தின்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க எவரேனும் முயற்சிப்பார்களாயின் அதனை எமது கட்சி முற்றிலும் எதிர்க்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000