அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி - கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியைக் கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து தாம் அதிர்ச்சியடைவதாகவும் அவர் பாதுகாப்பாக இருப்பதையிட்டு நிம்மதியடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களும் கடந்த காலங்களில் இவ்வாறான அரசியல் வன்முறைகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் டொனால்ட் ட்ரம்ப் காயமடைந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த அவர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000