Category:
Created:
Updated:
இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர் ஒருவர், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினால் தாக்கி அழிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கியதில் காயமடைந்துள்ளார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனை எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
காயமடைந்தவர் வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இலங்கையர் எனத் தெரியவந்துள்ளது.
ஏவுணையின் இரும்புத் துண்டு ஒன்று தலையில் தாக்கியதில் குறித்த நபர் காயமடைந்ததாகவும் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000