மதுவரித் திணைக்களம் குறித்து நாடாளுமன்ற குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி
நாடாளுமன்றின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளுக்கு மத்தியிலும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து கடந்த ஆண்டுமுதல், 2024,ஜூன் 15 வரை 1.8 பில்லியன் நிலுவைத் தொகையை மதுவரி திணைக்களம் வசூல் செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை குறித்த நாடாளுமன்ற குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எனவே, வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு, அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படத் தவறியதற்கு தனது கடும் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தரவுகளின்படி, டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் வரி நிலுவை 1,659 மில்லியன் ரூபாயாக உள்ளது.
ஹிங்குரான டிஸ்டிலரீஸ் 102 மில்லியன் ரூபாயையும், சினெர்ஜி கம்பனி 37 மில்லியன் ரூபாயையும், வயம்ப டிஸ்டிலரீஸ் 79 மில்லியன் ரூபாயையும் வரி நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000