சினிமா செய்திகள்
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
Ads
 ·   ·  1867 news
  •  ·  0 friends
  • 1 followers

ஜனாதிபதியின் தேசிய திட்டம் - யாழ் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு

முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம் (13.07.2024) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியால் நேற்’றுமுதல் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த திட்டமானது 25 மாவட்டங்களிலும் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இன்று 13 ஆம் திகதியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த உதவித் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்ததுடன் தகுதிபெற்ற மாணவர்களுக்கான சான்றுகளையும் வழங்கிவைத்தார்.

இதேநேரம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றுமுதல் ஜூலை 15 ஆம் திகதி வரையும், பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 13 ஆம் திகதியும் கம்பஹா மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளிலும், 

வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் ஜூலை 17 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.

மேலும், முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 ஆம் திகதியும் மொணராகலை, மாத்தறை மாவட்டங்களில் ஜூலை 19 ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர் தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம், தரம் ஒன்றுமுதல் 11 வரையான மாணவர்களுக்கு 3500 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

  • 491
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads