நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்கான அடிப்படை அடித்தளம் அரசாங்கத்தினால் ஈடப்பட்டுள்ளதாக - ஜனாதிபதி ரணில்
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் மற்றும் நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்கான அடிப்படை அடித்தளம் அரசாங்கத்தினால் ஈடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
1,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய ஏற்றுமதி செயலாக்க வலயமான பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டத்தை இன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் பிங்கிரிய முதலீட்டு வலயம் அதன் நிறைவின் பின்னர் 2,600 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் 75,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள “டொங்ஷியா கைத்தொழில்” லங்கா நிறுவனத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலீட்டு சபை அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
மேலும் விவசாயம், உற்பத்தி கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய 05 துறைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பிங்கிரியை இலங்கையின் பிரதான பொருளாதார வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000