இந்திய - சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றி
இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ஓட்டங்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 77 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சிம்பாப்வே அணியின் முசரபாணி மற்றும் வெலிங்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதற்கமைய 235 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000