பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?
பிரான்ஸ் உட்பட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது.
இமானுவேல் மேக்ரான் கட்சியின் உறுப்பினர்கள் குறைவாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், பிரான்ஸ் ஐரோப்பிய மக்களவை கலைக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான முதற் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சியான ஆர்என் கட்சி அதிகளவு ஆசனங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என முன்னதாக கருத்துக்கணிப்புகளும் வெளியாகியிருந்தன.
தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையேற்பட்டால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் எனவும், இதனால் ஜனாதிபதி இமானுவேல் மைக்ரோனின் அதிகாரம் பெருமளவிற்கு பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முதற்சுற்று வாக்களிப்பில் மரைன் லெபென்னின் ஆர்.எல் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தீவிர வலதுசாரிகள் பிரான்சில் ஆட்சியமைப்பது குறித்த அச்சமும் உருவாகியுள்ளது.
தீவிர வலதுசாரிகள் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றுவார்கள். ஆனால், பெரும்பான்மைக்கான 289 ஆசனங்கள் அவர்களுக்கு கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றது.