நேட்டோ நாடுகள் தங்களது எல்லையை மீற வேண்டாம் - ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் உக்ரைன் போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் - ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் எனவும் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்து போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதுடன் தற்போது வரை போர் தொடர்கின்றது.
உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதால் ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.
இதனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருவதுடன், தற்போது இந்த போரின் போக்கு தற்போது ரஷ்யாவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக இந்த போரில் தங்கள் இலக்கை எட்டுவதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான தேவை இருக்காது என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்
இதேவேளை, ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என மேற்கத்திய நாடுகள் நினைப்பது தவறு எனவும் ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் எனவும் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000