Category:
Created:
Updated:
இந்தோனேசியாவின் பாட்மிண்டன் சங்கம் உறுதிப்படுத்தியபடி, திங்களன்று 17 வயதான சீன வீரர் ஜாங் ஜிஜி, இந்தோனேசியாவின் ஜோககர்த்தாவில் நடந்த ஆசிய போட்டியின் போது சரிந்து விழுந்து இறந்தார்.
ஞாயிற்றுக்கிழமை பாட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் ஜப்பானின் கசுமா கவானோவுக்கு எதிராக ஜாங் போட்டியிட்டார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார். அவரை மருத்துவக் குழுக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவர் யோககர்த்தாவின் முக்கிய அரசு மருத்துவமனையான டாக்டர் சர்ஜிடோ பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தோனேசியாவின் பேட்மிண்டன் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ப்ரோடோ ஹேப்பி, ஜாங்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக இரு மருத்துவமனைகளும் முடிவு செய்ததாகக் கூறினார்.