சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  1613 news
  •  ·  0 friends
  • 1 followers

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து கிரிக்கட்டில் உயர் பதவி

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு உயர் பதவி வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவித்துள்ளது.

குறித்த தொடரானது இந்த மாதம் 10 ஆம் திகதி(ஜூலை 10) ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி ஜூலை 10 ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரானது ஜூலை 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலிரெண்டு டெஸ்ட்டில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் முதல் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், எஞ்சியிருக்கு போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ரோப் கீ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

41 வயதான ஜேம்ஸ் அண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 ரி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதில் 32 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

00

  • 409
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads