
கிண்ணத்தை வென்ற இந்திய அணி நாளை நாடு திரும்பும் நிலையில் டெல்லியில் பல விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை வென்ற இந்திய அணி நாளை (04) நாடு திரும்ப உள்ள நிலையில் டெல்லியில் பல கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' ( Beryl) புயல் காரணமாக பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியுடன் புறப்படும் சிறப்பு விமானம் நாளை (04) அதிகாலை டெல்லியில் தரையிறங்குகிறது.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்பாடு செய்த விமானம் மூலம் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என அனைவரும் நாடு திரும்புகின்றனர்.
வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பும் இந்திய வீரர்களை வரவேற்க டெல்லியில் பல கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000