சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

டி20 உலகக்கிண்ணம் - 3 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில், தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

குழு 2இல் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள், ஆன்டிகுவாவில் நடந்த சூப்பர் 8 சுற்று போட்டியில்ஈன்று மோதின.

இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது. ஜென்சென் வீசிய முதல் ஓவரிலேயே ஷாய் ஹோப் (0) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 1 ரன்னில் மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரஸ்டன் சேஸ் தொடக்க வீரர் கைல் மேயர்ஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த கூட்டணி 81 ஓட்டங்கள் குவித்தது.

மேயர்ஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷம்ஸி பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து வந்த ரோவ்மன் பாவெல் (1), ரூதர்போர்டு (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க சேஸ் அரைசதம் விளாசினார். அதிரடி காட்டிய அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி ஷம்ஸி ஓவரில் வெளியேறினார்.

ரஸல், அகேல் ஹொசைன் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. ஷம்ஸி 3 விக்கெட்டுகளும், ஜென்சென், மார்க்ரம், மஹாராஜ் மற்றும் ரபாடா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக்ஸ் (0), டி காக் (12) இருவரும் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களில் 123 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

அணித்தலைவர் மார்க்ரம் 18 ஓட்டங்களிலும், கிளாசென் 22 ஓட்டங்களிலும் அல்சரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். எனினும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்கு நெருக்கடி கொடுத்தார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. டேவிட் மில்லர் 4 ஓட்டங்களிலும், ஸ்டப்ஸ் 29 (27) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மஹாராஜ் 2 ஓட்டங்களில் அவுட் ஆக, ஜென்சென் அதிரடியாக ஆடினார்.

கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே ஜென்சென் சிக்ஸர் விளாசினார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சேஸ் 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் மற்றும் ரஸல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது

000

  • 415
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads