இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும். சமூகம் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
வேளாண்மை பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனைவியுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பயணங்களில் ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்கால சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வர்த்தக தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடன் இருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும் மதிப்புகளும் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சுபகாரிய பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மூலம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு
மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். பாகப்பிரிவினை செயல்பாடுகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
மகரம்
தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாக்கு சாதுர்த்தியம் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
எதிர்பாராத அதிர்ச்சிகரமான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். கணிப்பொறி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயர்கல்வி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாஸ்திரம் தொடர்பான தெளிவுகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
பணிபுரியும் இடத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். வங்கி பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சில்லென குளிர்ந்த காலையில்
சிலிர்த்தது குளித்த கருங்குயில்
சிக்கென சிறைபிடிக்க அலைபேசியில்...
சிறகடித்து பறந்ததே ஆகாயத்தில்.
-விஜி
விசுவாவசு வருடம் தை மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 22.1.2026
இன்று அதிகாலை 02.58 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி.
இன்று பிற்பகல் 02.33 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று மாலை 05.53 வரை வரீயான். பின்னர் பரிகம்.
இன்று அதிகாலை 02.58 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.33 வரை வணிசை. பிறகு பத்தரை.
இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 2.33 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 50-வது நபருக்கும் அவர் கடன் கொடுத்திருக்கிறார்!
அவரிடம் 1.70 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது, ஆனாலும் அவரிடம் எந்தவித ஆடம்பரமோ அல்லது அகங்காரமோ துளியும் இல்லை. அவர் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார், முன்பு ஃபியட் கார் வைத்திருந்தவர், இப்போது மாருதி ஆல்டோ ஓட்டுகிறார்.
அவர் கைபேசிகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்; அவரிடம் ஒரு சாதாரண கீபேட் ஃபோன் உள்ளது, ஆனால் அதுவும் அவருடைய ஓட்டுநரிடம்தான் இருக்கும். அவர் அதைத் தன்னுடன் வைத்துக்கொள்வதில்லை. அந்த ஃபோனில் ஐந்து பேர் மட்டுமே அவரை அழைக்க முடியும் – அவருடைய குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி – அதுவும் மிக அவசரமான சூழ்நிலையில் மட்டுமே.
அவர் தனது வருமானத்தில் 30-40 ஆயிரம் ரூபாயை மட்டுமே தனக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள அனைத்தையும் தானமாக அளித்துவிடுகிறார். அவர் செருப்பு அணிந்துகொண்டு, மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தானே சென்று வாங்குகிறார். அவரிடம் 5-6 ஜோடி ஆடைகள் மட்டுமே உள்ளன, அவற்றை அவர் துவைத்து மாற்றி மாற்றி அணிகிறார்.
இந்த நபர் வேறு யாருமல்ல, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் *ஸ்ரீராம் மூர்த்தி தியாகராஜன்* தான். அவர் ஸ்ரீராமரைப் போல எளிமையான மற்றும் பணிவான வாழ்க்கையை வாழ்கிறார், மேலும்
சமீபத்தில் ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக 6866 கோடி ரூபாயை தானமாக வழங்கியுள்ளார்.
*அவருடைய எளிமையைப் பற்றி நினைத்தாலே... மயக்கமே வந்துவிடும்!
சுக்லாம்பரதரம் விஷ்ணும
சசிவர்ணம் சதுர்புஜம
ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
ஸர்வ .விக்நோப சாந்தய
விளக்கம்:
இதில் கணேசரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்லாம் பரதர = வெள்ளை வஸ்த்ரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
2. விஷ்ணும் = எல்லா இடத்திலேயும் பரவி இருப்பவர்.
3. சசிவர்ணம் = நிலா மாதிரி பால்போன்ற நிறமுடையவர்.
4. சதுர்புஜ = நான்கு கைகள் உள்ளவர்.
5. ப்ரஸந்ந வதநம் = நல்ல மலர்ந்த முகம் உள்ளவர
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடப்புறத்திலும், இடக் கையால் வலப்புறத்தி லும் மண்டையில் குட்டி கொள்வது முறை.
விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி...
நடிகர் பிரபுவின் முதல் படம் சங்கிலி, இந்த படத்தின் படபிடிப்பிற்காக புறப்பட தயாரானார்கள் இவரது தந்தையான நடிகர் சிவாஜி கணேசனும், பிரபுவும், அப்பாவிடம் பிரபு "நீங்க ஸ்டுடியோவிற்கு செல்லுங்கள் சிறிதுநேரம் கழித்து நான் வருகிறேன் "என்றார் அதற்கு சிவாஜி "டேய்..நீயும் நானும் நடிக்க வேண்டிய காட்சியை இன்று படமாக்குகிறார்கள்..நீ..எப்போ வருவே " என்றார், "நீங்க போறதுக்குள்ளே வந்துடுவேன் ..போங்கப்பா.." என்று சொன்னார் பிரபு, "சரி சீக்கிரமாக வா " என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சிவாஜி .
சிவாஜி ஸ்டூடியோவுக்கு வந்த பின் சிறிது நேரம் கழித்து பிரபு வந்தார் , சிவாஜி கேட்டார் "எங்கடா போய்ட்டு வர. "
"அது ஒன்னும் இல்லப்பா நான் சினிமாவில் முதன்முதலாக நடிக்க போறேன் , ராமாபுரம் தோட்டத்துக்கு போய் பெரியப்பாவிடம் (எம்ஜிஆர்) ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தேன் " என்றாராம் பிரபு.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் ஒரு கதை.
மதுரை நகரில் பாணபத்திரன் என்ற இசைப் புலவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரசாங்கத்தில் உத்தியோகம். அவன் சிவபக்தன். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதானத்தில் இசை இசைத்துத் தொண்டு செய்வதிலேயே நாட்டம் உடையவனாக இருந்தான். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற வீணை வித்துவான் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். அரசன் தன் ஆஸ்தானத்தில் உள்ள பாணபத்திரனுக்கு அவனோடு வாசிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். பாணபத்திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதானத்துக்குச் சென்று, "இறைவனே, ஏமநாதனை நான் யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை விட்டுத் தள்ளிவிடுவானே! ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே! அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும்? உனக்குத் திருத்தொண்டு எப்படிச்செய்ய முடியும்?" என்று கண்ணீர் விட்டுக் கதறினான்.
அன்று மாலை நல்ல மழை வந்துவிட்டது. இறைவன் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக் கொண்டு தன் தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தான். மழைக்கு ஒதுங்குகிறவனைப் போல, ஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, யாழை எடுத்து மெல்ல வாசிக்க ஆரம்பித்தான். அந்த இனிய நாதம் ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. ஒரு கிழ விறகுவெட்டி; விறகுக் கட்டும் அவன் அருகில் இருக்கிறது; விறகு போலவே ஒரு யாழ். அந்த யாழிலிருந்தா அவன் இத்தகைய இனிமையான இசையை எழுப்புகிறான்! எழுந்திருந்து அவனிடம் சென்றான். "அப்பா, நீ யார்? இந்த இனிமையான சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய்?" எனக் கேட்டான்.
'அதை ஏன் கேட்கிறீர்? என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது! நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா? என் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் வாசிப்பதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது; நானும் யாழ் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவர் எனக்கு மிகவும் சிரமப்பட்டே சொல்லிக் கொடுத்தார். கடைசியில் என் தலை நரையோடிக் கிழவன் ஆகிவிட்டேன். 'போ, இனி உனக்கு வீணை வரவே வராது' என்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல் விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்' என்றான். 'வீணையே வராது எனச் சொல்லி கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாக வாசிப்பான் என்றால், இவன் குருநாதர் எப்படி வாசிப்பாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான்.
"அவரை உமக்குத் தெரியாதா? அவர்தான் பாணபத்திரர்; பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான். அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாக வாசிக்கிறேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படி வாசிப்பார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்' எனச் சொல்வதுபோலச் சொன்னார்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்த தடைகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
ரிஷபம்
காப்பீட்டு தொடர்பான வரவுகள் கிடைக்கும். குண நலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். வாழ்க்கை துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிதுனம்
திட்டமிட்ட காரியங்களில் சில அலைச்சல்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதிணி ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். சகோதரர்களிடம் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிந்தனை போக்கில் புதுமைகள் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
இனம்புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பணிகளில் பொறுமையை கையாளவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்ளவும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சிம்மம்
நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உருவாகும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவுபெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சொந்த ஊர் பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
தனுசு
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை மூலம் ஆதாயம் ஏற்படும். வீடு மாற்ற சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
நிதானமான செயல்பாடுகள் எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இறைப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சமூக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் தை மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை 21.1.2026..
இன்று அதிகாலை 03.19 வரை துவிதியை. பின்னர் திருதியை.
இன்று பிற்பகல் 02.32 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
இன்று இரவு 07.39 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.
இன்று அதிகாலை 03.19 வரை கௌலவம். பின்னர் மாலை 03.08 வரை தைத்தூலம். பிறகு கரசை.
இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 2 .32 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1. பெர்ரி பழங்கள்:
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளன, அவை மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன.
2. வாழைப்பழங்கள்:
வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. அவை நார்ச்சத்தின் நல்ல மூலமாகவும் உள்ளன, இது மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த பழமாக அமைகிறது.
3. ஆப்பிள்கள்:
ஆப்பிள்களில் நார்ச்சத்து, குறிப்பாக பெக்டின் நிறைந்துள்ளது, இது மலத்தை மென்மையாக்கவும் குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
4. ஆரஞ்சு:
ஆரஞ்சுகளில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
5. மாம்பழம்:
மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகின்றன.
6. பப்பாளி:
பப்பாளியில் பப்பேன் என்ற நொதி உள்ளது, இது புரதங்களை உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை நீக்குகிறது.
7. பேரிக்காய்:
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து, இது மலத்தை மென்மையாக்கவும் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மலச்சிக்கலை போக்க பழங்களை உட்கொள்வதற்கான உதவிக்குறிப்புகள்
1. பழங்களை பச்சையாக சாப்பிடுங்கள்:
சமைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பழங்களை விட பச்சையான பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் அதிகம்.
2. பலவகையான உணவுகளை உட்கொள்ளுங்கள்:
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து பெற பல்வேறு பழங்களை சாப்பிடுங்கள்.
3. நிறைய தண்ணீர் குடிக்கவும்:
போதுமான நீரேற்றம் செரிமான அமைப்பு வழியாக நார்ச்சத்து செல்ல உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
4. உங்கள் உணவில் படிப்படியாக பழங்களைச் சேர்க்கவும்:
நீங்கள் நிறைய நார்ச்சத்து சாப்பிடப் பழக்கமில்லை என்றால், உங்கள் செரிமான அமைப்பு சரிசெய்ய அனுமதிக்க படிப்படியாக பழங்களை அறிமுகப்படுத்துங்கள்.
பழங்கள் மலச்சிக்கலைப் போக்க உதவும் என்றாலும், சீரான உணவைப் பராமரிப்பது, நீரேற்றமாக இருப்பது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் தொடர்ந்து அல்லது கடுமையான மலச்சிக்கலை அனுபவித்தால், சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.
1970-களில் இந்தி திரையுலகில் டாப் ஸ்டாராய் ஜொலித்த நடிகை பர்வீன் பாபியும் அப்படிப்பட்ட பரிதாப லிஸ்ட்டில் ஒருவர் தான். அழகிய நட்சத்திரம் எரிந்து சாம்பலாகிப்போன கதை..
டீன் ஏஜ் வயதில் கதாநாயகி ஆகாமல் இருபத்தைந்தை நெருங்கும்போதுதான் திரைக்கு வந்து சேர்ந்தார் பர்வீன்.
50-களிலும் 60-களிலும் கிளாமர் விஷயத்தில் இந்தி திரை உலகமே தட்டு தடுமாறிக் கொண்டிருந்த சமயம்.
அப்போது நடை உடை பாவனைகளில் கிளாமர் வித் ஸ்டைல் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு பாலிவுட்டை கொண்டு போன நடிகைகள், ஜீனத் அமன், நீத்து சிங் மற்றும் பர்வீன் பாபி.
மனைவி ஜெயாவுக்கு அடுத்து அமிதாப்பச்சன் அதிகமாக தனக்கு படங்களில் ஜோடியாய் சேர்த்துக்கொண்டது பர்வீன் பாபியைத்தான்.
மஜ்பூர், தீவார், அமர் அக்பர் ஆண்டனி, நமக் ஹலால், காலியா மஹான், காலா பத்தர், ஷான் என போகும் அந்த பட்டியல். எல்லா படங்களும் மெகா ஹிட்.
அதிலும் இந்தி திரையுலகின் மெகா பிளாக் பஸ்டரான தீவார் படம் (தமிழில் ரஜினி நடித்த தீ) அமிதாப்புக்கு மட்டுமல்ல பர்வீனுக்கும் ஒரு மைல்கல்.
இன்னொரு ஹீரோயின் நீத்துசிங்குடன் கிளாமரில் போட்டி போடவேண்டிய நிலையில், அற்புதமான நடிப்பாலும் கிளாப்சை அள்ளிக்கொண்டு போவார் பர்வீன்.
அதிலும் வில்லனால் சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அமிதாப் ஓடிவருவார். அமிதாப் கரங்களில் அழுதபடியே பர்வீன் பாபி உயிரை விடும்போது தியேட்டரே நிசப்தமாகிவிடும்.
படத்தில் பர்வீன்பாபியை எந்த அளவுக்கு கதாநாயகன் நேசித்திருக்கிறான் என்பதை காட்டும் வகையில் காட்சிகள் ஓடும்.. பர்வீன் உயிர்போனதுமே வில்லன் இடத்தை தேடிப்போய் சராமாரியாக அனைவரையும் சுட்டுத்தள்ளுவார் அமிதாப்.
பர்வீனை கொன்ற வில்லனை அடித்து உதைத்து கடைசியில் குண்டுக்கட்டாக தூக்கி பல பலமாடி கட்டிடத்திலிருந்து ஜன்னல் வழியாகவீசியே கொன்று விடுவார் அமிதாப்.. (தளபதி படத்தில் மம்முட்டியை கொன்ற வில்லன் கரிவரதனை ரஜினி உடனே வெறியோடு தேடிப்போகும் சீன் இங்கிருந்து உருவப்பட்டதுதான்) அந்த அளவுக்கு தீவாரில் அமிதாப் -பர்வீன்பாபி அட்டாச்மெண்ட் கெமிஸ்ட்ரி கரைபுரளும்.
ஷான் படத்தில் அவர் தோன்றும் பியார் கர்னே வாலா பாட்டெல்லாம் ஒரு காலத்தில் தேசிய கீதம்போல இருந்தது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உச்சத்தில் தகதகவென மின்னிய பர்வீன்பாபி, இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு திடீரென மர்ம தேசத்து மகராணியாகிப்போனார்.
படஉலகைவிட்டு விலகினார், அமெரிக்கா போனார், வலம் வந்தார், ஏர்போர்ட்டில் உரிய ஆவணங்களை காட்டமுடியாமல் கண்டபடி உளறி மனநோய் மருத்துவனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்திய அரசே நேரடியாக தலையிட்டு மீட்டுவந்தது. மறுபடியும், அமெரிக்க அதிபர் உட்பட உலகத்தலை வர்கள் தன்னைக்கொல்ல சதி செய்வதாக சொல்ல சாரி, பிதற்ற ஆரம்பித்தார்.
அமிதாப்பச்சனை, அண்டர் கிரவுண்ட் தாதா என்று குற்றம் சாட்டினார். எல்லாவற்றையும்விட, நோய்வாய் பட்டு வீல் சேரே கதியானார்
கடைசியில் மும்பை வீட்டில் 2005 ஜனவரி 22-ந்தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மூன்று நாட்களாக பால்பாக்கெட்டுகள், டெய்லி பேப்பர்கள் எடுக்கப் படாமல் வீடு மூடியே கிடைந்ததை பார்த்து சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் சொன்னார்கள்.
போலீசார் வந்து பார்த்தபோது, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பர்வீன் பாபி, வீல் சேரிலிருந்து விழுந்து இறந்துபோய், சடலம் அழுகிக்கொண்டிருந்தது.
பிரேத பரிசோதனையில்தான் ஜனவரி 20ந்தேதியே பர்வீன்பாபி இறந்துவிட்டது தெரியவந்தது. (இந்தப் பதிவு ஏன் என்று இப்போது புரிகிறதா?)
காதல் தோல்வி, மாபியா கேங் பிடியில் அடிமையாக சிக்கினார் என பர்வீன் பாபி வரலாற்றில் பல பக்கங்கள் செவி வழிச்செய்தியாகவே இருந்தன.
1940களில் லேடி சூப்பர் ஸ்டராக விளங்கிய தங்கத்தாரகை நடிகை சுரையாவும் தேவ் ஆனந்த்துடனான காதல் தோல்வியால், இப்படித்தான் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் ஒற்றை ஆளாய் அவ்வளவு பெரிய பங்களாவில் அனாதையாக இறந்துபோனார். அவரது சடலமும் சில நாட்கள் கேட்பாரற்று கிடந்தது..
சராசரி ஆட்களுக்கு கிடைக்கும் கௌரவமான மரணம்கூட, நாடே வியந்த பிரபலங்களுக்கு சில நேரம் கிடைப்பதில்லை..
காலத்தின் கைகளில்தான் எத்தனை வகையான கோலங்கள், அலங்கோலங்கள் உள்பட!
வெள்ளரி விதை
வெள்ளரி விதையை பழத்துடனோ, சமைத்தோ உண்ணலாம். வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன.
சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும். புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
சப்ஜா விதை
சப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
இது, பித்தத்தைக் குறைக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். ஜீரணப் பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை வராமல் காக்கும்.
1. சீக்கிரம் தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுந்திருப்பது மருந்து.
2. காலையில் கடவுளை நினைப்பது,கோவிலுக்கு சென்று வழிபடுவது மருந்து.
3. யோகா, பிராணயாமம் மற்றும் , உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.
4. காலை மற்றும் மாலை கைகளை வீசி நடக்கும் நடைப்பயிற்சிகளும் மருந்துகளாகும்.
5. வாரத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம் அனைத்து நோய்களுக்கும் மருந்து.
6. அதிகாலை சூரிய ஒளி சிறந்த மருந்து.
7. நன்னாரி ,இராமச்சவேர் பயன்படுத்திய மண் பானை நீரைக் குடிப்பதும் மருந்து.
8. கைதட்டுவதும் மருந்து.
9.வாயில் நன்றாக அரைத்து உமிழ்நீருடன் மெல்லுவதும் மருந்து.
10. தண்ணீர் குடிப்பதும்(குறைந்தது 3லிட்டர்) .போதும் என்ற மனநிறைவுடன் சாப்பிடுவதும் மருந்துகள்.
11. சாப்பிட்ட பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பது மருந்து.
12. மன அழுத்தத்திற்கு ஆளாகாமல்,மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது மருந்து.
13. சில நேரங்களில், மௌனம்(அமைதி) மருந்து.
14. சிரிப்பும் நகைச்சுவையும் மருந்துகள்.
15. மனநிறைவு மருந்து.
16. மன அமைதியும் உடல் அமைதியும் மருந்து.
17. நேர்மையும் நேர்மறையும் மருந்துகள்.
18. தன்னலமற்ற அன்பும்
உணர்ச்சிகளும்
மருந்துகளே.
19. மற்றவர்களுக்கு நன்மை செய்வது மருந்து.
20.நல்லொழுக்கத்தைத் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.
21. மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வது மருந்து.
22.குடும்பத்துடன்
சாப்பிடுவது, மற்றும் நேரத்தைச் செலவிடுவது மருந்து.
23. ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத முழுமையான மருந்தகம்.
24. உடலை குளிர்ச்சியாகவும், பிஸியாகவும், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்திருப்பது மருந்து.
25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்து





















