Feed Item
·
Added article

பிறந்ததிலிருந்தே ஒரு கண் தெரியாது பாகுபலி படத்தால் இரண்டு முக்கிய organ Failure,

Raana Daggubati - நடிகர் ராணா சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் மனம் திறந்து பேசி இருந்தார்.. அதில் அவருக்கு சிறுவயதிலிருந்தே ஒரு கண் பார்வை கிடையாதாம் இதற்காக மாற்று அறுவை சிகிச்சை செய்தும் பலன் அளிக்கவில்லையாம்.

மேலும் அவருக்கு சிறுவயதில் இருந்து ரத்த அழுத்தம் இருந்ததாம்... அதனால் ஏற்கனவே அவர் சிறுநீரகம் பாதிப்படைந்து இருந்ததாம்.

பாகுபலி படத்திற்கு அதிக உடல் எடை.. ஏற்ற வேண்டியிருந்ததால் மற்றும் நீண்ட காலம் இதே எடையைப் பராமரிப்பதும், கடுமையான உழைப்பும் அவரது உடல்நிலையை இன்னும் மோசமாக்கியது.

​சிறுநீரக செயலிழப்பு: அவரது தீராத ரத்த அழுத்தம் காரணமாகச் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதயத்தைச் சுற்றித் தாதுக்கள் படிதல் (Calcification around the heart) போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன.

நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் சில வருடத்துக்கு முன் அவர் மிகவும் ஒல்லியாகி காணப்பட்டார் காரணம் அவர் அமெரிக்காவுக்கு சென்று.. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

பாகுபலி படத்திற்குப் பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து இருந்தன.ஆனால் அவர் உடல் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் அனைத்து அட்வான்ஸயும் திருப்பிக் கொடுத்தார்.

அதன் பிறகு தான் அமெரிக்காவுக்கு சென்று.. அறுவை சிகிச்சை செய்தார் அதன் பிறகு பல மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.

பல மாதங்கள் உப்பே இல்லாத சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும். ஒரு மனிதன் சினிமாவுக்காக பாடுபட்டு பாகுபலி என்ற பெரிய வெற்றிக்கு பிறகு வாழ்க்கையில் ஏற்றம் காண வேண்டிய நேரத்தில் சரிவை சந்தித்து ஹாஸ்பிடல் பெட்டில் படுக்கும் சந்தர்ப்பம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது.

ஆனால் Raana never giveup என்றே சொல்லலாம் அவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக அந்த நோயிலிருந்து முழுவதுமாக குணமானார். இப்பொழுது ஒரு புது மனிதனாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்,

கிட்டத்தட்ட மறுபிறவி தான்.....

  • 137