கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (17) நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துள்ளார். அத்துடன், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார். கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா நாட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
கனடாவின் ஹாமில்டனில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 11 மற்றும் 15 வயதான சிறுவர்களை ஹாமில்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ (Chevrolet Silverado) மற்றும் ஒரு 2015 வெள்ளை ஜீப் (Jeep Cherokee) வாகனங்களின் சாவிகளை திருடி வாகனங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஆபத்தான முறையில் வேகமாக வாகனங்கள் செலுத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது இரண்டு வாகனங்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள் சிறிதளவு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒண்டேரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டின் எட்டோபிக்கோ வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரை திருட முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காரை திருட முயற்சித்தவர்கள் குறித்து அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
“நால்வர், முகமூடிகள் அணிந்து, தெருவில் வேகமாக வந்து என் டிரைவ்வேயில் இருந்த காரை எடுத்து செல்ல வந்தார்கள்,” என ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் குற்றவியல் நீதித்துறையை முதல்வர் கடுமையாக விமர்சித்தார். குறித்த நபர்களை ‘முட்டாள் குற்றவாளிகள்’ என அவர் விவரித்துள்ளார்.
ந்தேக நபர்களை கைது செய்ததாக டொராண்டோ பொலிஸார், தெரிவித்திருந்தனர்.கைதான நான்கு பேரில் இரண்டு பேர் 17 மற்றும் 16 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலிலை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13 ஆம் திகதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், இராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இருநாடுகளின் இடையேயான போர் உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாக அரபு, இஸ்லாமிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், ஈரான் தமது குடிமக்களை தங்கள் செல்போன்கள் மற்றும் இன்னபிற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வட்ஸப் அப்பை நீக்குமாறு வலியுறுத்தி உள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் இவ்வாறு வலியுறுத்தல் வெளியிடப்பட்டது. ஈரானில் இருந்து பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு பகிர அல்லது அனுப்பப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், ஈரான் அரசின் இந்த வலியுறுத்தலை, உத்தரவை வாட்ஸ் அப் நிறுவனம் புறம் தள்ளிவிட்டது. வாட்ஸ் அப் செயலிலை நீக்குமாறு ஈரான் கூறியதை வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியாக மறுத்துள்ளது. இதுபோன்ற தவறான தகவல்கள் தங்களின் சேவைகளை பாதிக்கும், பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பது எங்களின் கடமை என்றும் கூறி உள்ளது. மேலும், யார், யாருக்கு என்ன செய்திகள் அல்லது குறிப்புகள் அனுப்புகின்றனர், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சகோதரர்களிடத்தில் அலைச்சல்கள் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகளால் கையிருப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம்
சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துகளால் சிறு விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கடகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில யூகங்களை புரிந்துகொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில யூகங்களை புரிந்துகொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கமானவர்களால் ஆதாயம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
எதிர்காலம் சார்ந்து புதிய வியூகங்களை அமைப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை காக்கவும். பயனற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
தனுசு
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வருமானம் தொடர்பான விஷயங்களில் திருப்தி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வீடு, வாகனங்களைச் சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
மகரம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த வியாபார சரக்குகள் விற்பனையாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் அமையும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
வியாபாரம் ரீதியாக புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.
அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது
மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".
நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.
சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".
கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.
கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.
தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.
இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 18.6.2025.
இன்று காலை 10.58 வரை சப்தமி. பிறகு அஷ்டமி.
இன்று அதிகாலை 05.55 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.
இன்று காலை 10.58 வரை பவம். பின்னர் இரவு 09.58 வரை பாலவம். பிறகு கௌலவம்.
இன்று அதிகாலை 05.53 வரை மரண யோகம். பின்னர் இரவு 10.01 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அற்புதமான மருந்துகள்
1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம்
2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்
3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம்
4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து
5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து
6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து
7. சூரிய ஒளியும் ஒரு மருந்து
8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்
9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம்
10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம்
11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம்
12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்
13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்
14. சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம்
15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்