·   ·  1156 posts
  •  ·  0 friends

விஞ்ஞானி ஐன்ஸ்டினின் ஞாபக மறதி

மிகப் பெரிய விஞ்ஞானிகள் கூட ஞாபக மறதியால் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு மறதிக்காரர். ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.

டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார்.

தன் கைப்பையை முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார்.

அவரோ செய்வது அறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது.

எனவே அவர் '' நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்ல, இந்த இரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும்.

எனவே நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க மாட்டீர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். எனவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நிம்மதியாகப் பயணத்தைத் தொடருங்கள் என்றார்.''

அப்பொழுது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா ?

''அதுவல்ல என் பிரச்சனை. டிக்கெட் வேண்டும் என்றால் என்னால் இன்னொன்று கூட வாங்கிக் கொள்ள முடியும்.ஆனால், நான் எந்த ஊருக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன் என்பதை அந்த டிக்கெட்டைப் பார்த்தால் தானே எனக்குத் தெரியும் ! இப்பொழுது டிக்கெட் பரிசோதகர் திருதிருவென விழித்தார்.

  • 20
  • More
Comments (0)
Login or Join to comment.