Posts
Latest Posts
மாவீரன் அலெக்சாண்டர் வைத்த சோதனை
  •  ·  sivam
  •  · 
மாவீரன் அலெக்சாண்டர் உலகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த காலம் அது. நிறைய யுத்தங்கள்... நிறைய படையெடுப்புகள்.. நிறைய சவால்கள்..பாபிலோனியாவில் ஒரு முக்கியமான போரை தலைமை தாங்கி நடத்திச் சென்ற சமயம்.. கிழக்கு பக்கம் இன்னொரு மன்னன் அவரை எதிர்த்து படையெடுத்து வந்தான். ஆனால் அந்த மன்னனின் படைகள் சிறியது. அதனால் அந்த படைகளை எதிர்த்து தானே போகாமல் தன் தளபதிகளில் ஒருவரை அனுப்பி வைக்க எண்ணினார் அலெக்சாண்டர். படைகளை நடத்திச் செல்ல சரியான தளபதி யார் என மிகவும் யோசித்து பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவரின் நான்கு தளபதிகளையும் தங்கள் குதிரையுடன் யூப்ரடீஸ் நதிக்கரைக்கு வரவழைத்தார்.தங்களை அலெக்சாண்டர் வரவழைத்த காரணம் அவர்களுக்குத் தெரியும். அந்த யூப்ரடீஸ
பெர்னாட் ஷா
  •  ·  sivam
  •  · 
சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட்லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர்.கீழே விழுந்ததனால் பெற்ற காயங்கள் மோசமானதால் ஏற்பட்ட நாள்பட்ட சிக்கல்களால் பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார்.இலக்கியத்திற்கான நோபல்பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இன்றுவரை இவர் ஒருவரே.அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார். பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகர
இன்றைய ராசி பலன்கள் - 29.9.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய ராசி பலன்கள் - 29.9.2025 மேஷம்வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய மாற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஆன்மிக பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உருவாகும். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மனதளவில் குறையும். பழைய சிக்கல்கள் ப
இன்றைய நாள் எப்படி?  - 29.9.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி திங்கட்கிழமை 29.9.2025இன்று பிற்பகல் 01.41 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று அதிகாலை 02.24 வரை கேட்டை. பின்னர் மூலம்.இன்று இரவு 11.12 வரை சௌபாக்கியம். பிறகு சோபனம்.இன்று அதிகாலை 12.55 வரை கரசை. பிற்பகல் 01.41 வரை வனிசை. பின்னர் பத்தரை.இன்று அதிகாலை 02.24 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரைகாலை : 09.15 முதல் 10.15 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைமாலை : 07.30 முதல் 08.30 மணி வரை
பணக்காரரின் சாமார்த்தியம்
  •  ·  sivam
  •  · 
நண்பர் ஒரு பாங்குக்குள் நுழைகிறார் .மேனேஜரிடம் " எனக்கு 5000/ கடன் வேணும் " என்கிறார்."உங்களை எனக்குப் பழக்கமில்லை ஏதாவது Collateralகுடுத்தா கடன் தரோம் "" பேங்க் வாசலில் என்னுடைய புத்தம் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குது. ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ் உள்ளேயே இருக்கு . அதை அடமானம் வச்சுக்கிட்டு கடன் குடுங்க "என்றார் நண்பர்.கடன் உடனே வழங்கப்பட்டது . பாங்க் டிரைவர் காரை பத்திரமாக ஓட்டிச்சென்று பேஸ்மெண்டுல நிறுத்துகிறார் .மானேஜரும் ஊழியர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்."வெறும் 5000துக்கு இவ்ளோ காஸ்டலி காரை அடமானம் வச்சுட்டுப் போறாரே ? ரொம்ப அப்பாவி ."பல கோயில்கள் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டு, ஒரு மாதம் கழித்து வந்து 5000 + வட்டி 39 ரூபாய் கட்டி, வண்டியை எடுத்துக் கொள்கிறார் நண்பர
காது என்ன செய்கிறது தெரியுமா?
  •  ·  sivam
  •  · 
காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால்...,காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்தஉடல்அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.ஒரு டெட்பாடியை நிற்க வைக்க முடிய
இன்றைய ராசி பலன்கள் - 28.9.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். வெளிநாட்டு வர்த்தகத்தில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதில் நன்மதிப்பை மேம்படுத்தும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டு.உடல் நிலையில் புதிய பொலிவுடனும் புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்ப
இன்றைய நாள் எப்படி?  - 28.9.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.9.2025இன்று பிற்பகல் 12.19 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று அதிகாலை 12.09 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று இரவு 11.13 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.இன்று பிற்பகல் 12.09 வரை தைத்தூலம். பின்னர் கரசை.இன்று காலை 06.02 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 08.00 முதல் 09.00 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 03.15 முதல் 04.15 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
சூட்டுக்கோல்மாயாண்டிசுவாமிகள்
  •  ·  sivam
  •  · 
மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்ப
 ஞாயிற்று கிழமையில் மட்டும்.......
  •  ·  sivam
  •  · 
ஒரு தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த​ ஆஸ்பத்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த​ அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது.பல​ நாடுகளிலிருந்து மிக​ சிறந்த​ மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன​ தான் நடக்கிறது என்று பார்க்க​ மிக​ பெரிய​ மருத்துவ​ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த​ குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக​ போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க​.....திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் ம
ஹிலாரி கிளின்டன் எழுதிய புjத்தகம்
  •  ·  sivam
  •  · 
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் "HARD CHOICES" என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் ஒரு ஆச்சரியமான விபரத்தை தெரிவித்துள்ளார்.இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்து சில வாரங்களுக்கு பிறகு....ஒரு ரஷ்ய வீரருக்கு வீட்டுக்கு செல்ல விடுமுறை கிடைக்கிறது. விடுமுறையை கழிக்க ஊருக்குச் சென்ற வீரருக்கு. ஊருக்குள் நுழையும் போதே அதிர்ச்சி காத்திருக்கிறது.அவரது ஊர் எதிரிகளால் குண்டு வீசப்பட்டுபிணங்கள் குவியலாக ராணுவ வண்டியில் கிடத்தப்பட்டு இருந்தது.பல நூற்றுக் கணக்கில் கிடந்த சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன.சடலங்களின் முன்னால் அந்த ராணுவ வீரர் சிறிது நேரம் நின்றார்.ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த காலணிகளை அவர் திடீரென கவனித்தார்.முன்ப
இன்றைய ராசி பலன்கள் - 27.9.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். பழைய விஷயங்களால் குழப்பங்கள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகளை சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் இருப்பது நல்லது. கனிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்குடும்பத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். பெரியோர் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்த கவலைகள் விலகும். உத்யோக பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் ந