"என்னங்க.. உங்க கார்டை குடுங்க. கொஞ்ச நாள் நான் வச்சுக்குறேன்.."
"ஏன் திடீர்னு கார்டு கேட்கிற?"
"ஏதாவது emergencyனா.. அதான்.."
"2 நாள் கழிச்சு தறேன்.."
"இல்ல எனக்கு இப்பவே வேணும்.. முக்கியமான பொருள் வாங்கணும் அர்ஜெண்ட்டா.."
"உனக்கு என்ன அர்ஜெண்ட்னு எனக்கே தெரியும். நாளைக்கு என் பிறந்தநாளுக்கு கிஃப்ட்னு சொல்லி என் கார்டுலேயே ஏதாவது ஆர்டர் போடுவ. அதனால நான் 2 நாள் போகட்டும் தர்றேன்.."
"ஏன்ங்க உங்க சர்ப்ரைஸ நீங்களே கெடுக்குறீங்க?"
"அதுக்கு தான் உன் கைல காசே குடுக்காம வச்சுருக்கேன்.. "
"உங்களுக்கு ஏதாவது நான் குடுக்கணும்னு ஆசை படுறேன்.. பேசாம வர்றீங்களா buffet கூட்டிட்டு போறேன்.."
"கூட்டிட்டு போய்.. அங்க இதே கார்டை தான் தேய்க்க போற.."
"பார்த்தீங்களா.. இதுக்கு தான் நான் அப்பவே வேலைக்கு போறேன்னு சொன்னேன். நீங்க தான் நீ வீட்ல இரு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னிங்க. இதுவே நானே சம்பாரிச்சு..."
He:
"நீ பேசாம அமைதியா நான் சொல்லுறதுக்கெல்லாம் அந்த ஒரு நாளாச்சு தலையாட்டிட்டு இருக்குறது தான் நீ எனக்கு தரப்போற பிறந்த நாள் பரிசு. காசும் செலவாகாது.. நானும் நிம்மதியா இருப்பேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. "
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பிராமணர் வசித்து வந்தார். ஒரு சடங்கு சடங்கு செய்த பிறகு அவருக்கு ஒரு ஆட்டு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த பிராமணர் தனது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கினார். வழியில் ஆட்டை கட்டுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, பிராமணர் ஆட்டைத் தனது தோள்களில் சுமந்து சென்றார். அவர் ஒரு சில தூரம் மட்டுமே சென்றபோது, மூன்று முரடர்கள் பிராமணர் ஆட்டை சுமந்து செல்வதைக் கண்டனர். பிராமணர் அவர்களைக் கவனிக்காதபடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் மிகவும் பசியுடன் இருந்தனர், பிராமணர் தனது ஆட்டுடன் தனியாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.
அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர். முதல் முரடன், "இந்தப் பசியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். பிராமணரை ஏமாற்றி ஆட்டைத் திருடிவிட்டால், ஆடு நம் மூவருக்கும் மிகவும் அருமையான உணவைத் தரும். எனக்கு ஒரு திட்டம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறி, மற்ற இருவரின் காதுகளிலும் திட்டத்தைக் கிசுகிசுத்தான்.
திட்டத்தின் படி, அவர்கள் பிராமணரின் பின்னால் குனிந்தனர். முதல் முரடன் பிராமணரின் பாதையில் நின்றான். பிராமணர் தனது தோளில் ஆட்டுடன் அவரை அணுகியபோது, அவர் அவரிடம், "ஓ புனித பிராமணரே, நீங்கள் உங்கள் தோளில் ஒரு நாயை சுமந்து செல்வதை நான் காண்கிறேன். உங்களைப் போன்ற ஒரு பக்தியுள்ள நபர் ஏன் தனது தோளில் ஒரு நாயை சுமந்து செல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் பிராமணர் மிகவும் கோபமடைந்து, "உனக்கு கண்கள் இல்லையா? நாய்க்கும் ஆட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் பார்க்க முடியவில்லையா?" என்று பதிலளித்தார்.
பின்னர் திருடன் தான் தனது பங்கை ஆற்றியதாக நினைத்து அவனிடம், "மன்னிக்கவும், ஐயா, ஆனால் நான் என் கண்களால் பார்ப்பதை மட்டுமே சொல்கிறேன். தெளிவாக, உயர் கல்வி கற்றவராக இருப்பது எல்லாம் இல்லை" என்று கூறினான். பிராமணர் தனது பேச்சைக் கேட்பதை உறுதிசெய்து கொண்டு, முரடன் முணுமுணுத்தான்.
அந்த பிராமணர் தனது பயணத்தைத் தொடர்ந்தார், அந்த மனிதனின் முட்டாள்தனத்திற்காக அவரை சபித்தார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது முரடன் அவரை அணுகினார். பின்னர் அவர் பிராமணரிடம், "மதிப்பிற்குரிய ஐயா, நீங்கள் எவ்வளவு முட்டாள்! இந்த இறந்த கன்றை உங்கள் தோளில் எப்படி சுமக்க முடியும்? ஒரு பிராமணர் இறந்த விலங்கை சுமப்பது அவமானகரமானதல்லவா?" என்று கூறினார். பிராமணர் கோபமடைந்து அவரை நோக்கி, "சற்று முன்பு நான் சந்தித்த மற்றொரு முட்டாள் மனிதனைப் போலவே நீங்களும் குருட்டு மனமுள்ளவரா? அது ஒரு ஆடு, இறந்த கன்று அல்ல என்று உங்களுக்குத் தெரியவில்லையா?" முரடன் அப்பாவியாக நடித்தார். அவர் பிராமணரிடம், "என்னை மன்னியுங்கள் ஐயா. நான் பார்ப்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கத்தினார்.
பிராமணர் இப்போது கொஞ்சம் குழப்பமடைந்தார். அது உண்மையில் ஒரு ஆடுதானா என்பதை உறுதிப்படுத்த அவர் விலங்கைப் பார்த்தார். பிராமணர் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தார். சிறிது நேரத்தில், திட்டமிட்டபடி, மூன்றாவது முரடன் தோன்றி, "நீ ஒரு உண்மையான பிராமணனா?" என்று கேட்டான். பிராமணர், "ஆம், நான் தான். அது என்ன கேள்வி?" முரடன், "ஒரு புனிதமான மனிதன் எப்படி இவ்வளவு வெட்கக்கேடான செயலைச் செய்ய முடியும்? பன்றியை உன் தோள்களில் சுமக்க உனக்கு எவ்வளவு தைரியம்? உன்னைப் போன்ற புனிதமான ஒருவர் இந்த விலங்கைத் தொடக்கூடக் கூடாது, அதை உன் தோள்களில் சுமப்பது ஒருபுறம் இருக்கட்டும். யாராவது இதைச் செய்வதைப் பார்ப்பதற்கு முன்பு அதை கீழே போடு!" என்று கத்தினார்.
இந்த முறை, பிராமணர் பதட்டமடைந்தார். வழியில் சந்தித்த ஒவ்வொருவரும் தனது தோள்களில் வெவ்வேறு விலங்கைக் கண்டனர். முதல் நபர் ஒரு நாயையும், இரண்டாவது நபர் இறந்த கன்றையும், இப்போது ஒரு பன்றியையும் பார்த்தார். அவர் ஒரு ஆட்டைச் சுமந்து செல்வதை மூன்று நபர்களும் எப்படிப் பார்க்க முடியாது? அவர் ஒரு உருவத்தை மாற்றும் பூதத்தை சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார், அது எப்போதும் வடிவம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு அரக்கனைத் தோள்களில் சுமந்து செல்வதை நினைத்த மாத்திரத்தில் பிராமணரின் முகம் வெளிறியது. உயிருக்கு பயந்து, அவர் ஆட்டை கீழே போட்டுவிட்டு, முடிந்தவரை வேகமாக வீட்டிற்கு ஓடினார்.
அந்த முரடர்கள் ஆட்டைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆட்டைக் கொன்று அதன் இறைச்சியை விருந்து வைத்தனர்.
கதையின் நீதி என்னவென்றால்:
திரும்பத் திரும்பப் பேசப்படும் பொய் உண்மையாகத் தோன்றும்.
ஓஷோ சொன்ன கதை...
ஒரு ஏழை மரவெட்டி காட்டில் உள்ள சின்னஞ்சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். அந்தக் குடிசை மிகமிகச் சிறியது. அவனும் அவன் மனைவியும் மட்டுமே அதில் தூங்க முடியும் அளவே வசதி கொண்டது. ஒரு மழை நாள் நள்ளிரவில் விறகு வெட்டியின் குடிசைக் கதவு ‘தடதட’வென்று தட்டப்பட்டது.
விறகு வெட்டி தன் மனைவியிடம், “யாரோ ஒருவன் வழிதவறி காட்டில் மாட்டிக்கொண்டு விட்டான். மழையில் எங்கும் போகவும் முடியாது. விலங்குகள் ஆபத்து வேறு இருக்கிறது. அதனால் கதவைத் திற” என்றான். அவன் மனைவியோ இந்தக் குடிசையில் இன்னொரு மனிதனுக்கு எப்படி இடம் கொடுக்கமுடியும் என்று கேட்டாள்.
விறகு வெட்டி சிரித்தான். “இது ராஜ அரண்மனை அல்ல. அங்கேதான் இடப் பற்றாக்குறை இருக்கும். இது ஒரு ஏழையின் குடிசை. இங்கே இரண்டு பேர் வசதியாகத் தூங்க முடியும். மூன்று பேர் வசதியாக அமர்ந்து இருக்க முடியும். கதவைத் திற” என்றான்.
கதவு திறக்கப்பட்டது. வந்த மனிதன் விறகு வெட்டிக்கும் அவன் மனைவிக்கும் நன்றி சொல்லி அமர்ந்தான். அவர்கள் சேர்ந்து அமர்ந்து கதைகளைச் சொல்லிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தபோது கதவைத் தட்டும் சத்தம் மீண்டும் கேட்டது. கதவடியில் உட்கார்ந்திருந்த விருந்தினன், இன்னொருவருக்கு இடமில்லையே என்றான்.
விறகு வெட்டியோ, “இதைத்தான் நீங்கள் முன்பு வரும்போதும் என் மனைவி கூறினாள். அவளது சொல்லைக் கேட்டிருந்தால் நீங்கள் குடிசைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. மூன்று பேர் சௌகரியமாக அமர்வதற்கு இடம் இருந்தால் நான்காம் நபருக்கும் கொஞ்சம் இடம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லி கதவைத் திறக்கச் சொன்னான்.
தற்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். ஒரு அங்குலம் அளவு கூட இடமில்லை. மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஆனால் அது ஒரு மனிதனுடையதைப் போல இல்லை. இப்போதும் விறகுவெட்டி கதவைத் திறப்பானோ என்று இரண்டு விருந்தினர்களுக்கும் அச்சம்.
விறகுவெட்டியோ, “கதவைத் திறங்கள். அது என்னுடைய கழுதைதான். இவ்வளவு பெரிய உலகில் அது ஒன்றுதான் எனது நண்பன். நான் தினசரி வெட்டிக்கொண்டு வரும் விறகுகளைச் சுமக்கும் உயிர் அது. வெளியே கடும் மழை பெய்கிறது. என் நண்பனை வரவேற்போம்” என்றான்.
விறகு வெட்டியின் மனைவி உட்பட எல்லாரும் கதவைத் திறப்பதை எதிர்த்தனர். “கழுதை உள்ளே வந்தால் அது எங்கே நிற்கும். உனது குடிசையில் இப்படி மாட்டிக்கொண்டிருப்பதை விட மழையிலேயே நின்றுகொண்டிருந்திருக்கலாம்” என்றனர்.
“இது ஒரு ஏழையின் குடிசை. அது எப்போதும் வசதியானதே. தற்போது நாம் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். கழுதை வந்தால் நாம் எல்லாரும் நிற்போம். அவ்வளவுதான்” என்றான்.
கழுதையும் குடிசைக்குள் வந்தது. மழை நீர் அதன் ரோமம் முழுவதும் வடிந்துகொண்டிருக்க, விறகு வெட்டி அதைக் குடிசை நடுவில் கொண்டுவந்து நிறுத்தினான். எல்லாரும் அதைச் சுற்றி நின்றார்கள்.
“எனது கழுதை ஆத்மஞானியைப் போன்றது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். அது ஒருபோதும் தொந்தரவுக்குள்ளாகாது. அது நீங்கள் அமைதியாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும்.” என்றான் விறகு வெட்டி.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.
கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை(ரகுராம்கேட்) நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.
ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.
அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார். என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.
அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர். என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா? ஆம்; பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.
அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.
ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே. என்ன செய்யலாம்?
காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?
அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.
மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான். பிராமணரும் தன் மகளுக்கு் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.
அவ்வளவு தானே!
நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை. பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.
மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.
சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.
நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.
கலக்கத்துடன் சென்றார் பிராமணர். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது. மன்னன் பொருள் தருவானா மாட்டானா? ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்? அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ? அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா? குறைத்துவிடுவானோ? பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.
காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலைச் செய்ய ஆரம்பித்தார். வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.
அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.
அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.
என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?
சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.
பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார். தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை. ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.” என்றான் மந்திரி.
பூணூல் என்பது, யஜ்ஞோபவீதம் என்றும் அழைக்கப்படும்.
நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு...
நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.
சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன். மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு.
எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது... பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சது.. அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்..
இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சிரிச்சுகிட்டே சத்தமா சொன்னா...
யோவ்.. லூசு... முதல்ல வாய்ல இருந்து mask கழட்டிட்டு ஊதித்தொல...
கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
மூன்று வேலை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் உன் மரணம் வந்து விட வேண்டும்.
உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் மனைவியும் மக்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
- நேர்த்தியா உடுத்து வா! என்று சொன்னால்….
- உரிய நேரத்துக்கு வா என்று சொன்னால்…..
- நகம் வெட்டி வா! என்று சொன்னால்…..
- தலைமுடியை (சிகையலங்காரம்)மாணவனுக்கு ஏற்ற மாதிரி வெட்டி வா! என்று சொன்னால்…..
- வகுப்பறையை விட்டு தேவையில்லாமல் வெளியே வராதே! என்று சொன்னால் ….
- சுயமாக இருந்து பாடத்தை படி என்று சொன்னால்..
- பாடசாலை கீதத்துக்கு மதிப்பளி என்று சொன்னால்….
- தேவாரம் பாடும் போது சேர்ந்து பாடு என்று சொன்னால்..
- இதை எல்லாம் தாண்டி கல்வி தான் எல்லாமே என்று நாம் சொன்னால்.....
மாணவனின் பதில் ஏளனமான சிரிப்புதான்…..
கணவனுக்கும் மனைவிக்கும் பயங்கர சண்டை.
அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..
மனைவியால பொறுக்க முடியல..
கணவன் கிட்ட வந்தாங்க..
இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.
ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம்னாங்க.
கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.
மனைவி:::நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..
கணவன் - சரி நான் பெரிய மனசு பண்ணி நீ செஞ்ச தப்பை மன்னிச்சு விட்டுடறேன்..
மனைவி - ~~!!!!!!!!!!!!!!
குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.
இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.. அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.
குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.
உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்..
பெரிய தொகைதான்,......... இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.
புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.
அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?
பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.
"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.
மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.
அதுல சந்தேகமே இல்லை.
ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.
'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .
அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.
எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.
பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.
பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்
மிருகபலத்தோடு இருப்போம்... பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம்....
ஒரு குடிகாரனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்று உங்களுக்குத் தோன்றும்.
ஒரு துறவிக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் தானமாக கொடுக்கத் தோன்றும்.
ஒரு தலைவனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் படிப்பெல்லாம் பயனற்றது என்று தோன்றும்.
ஒரு ஆயுள் காப்பீட்டு முகவருக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - செத்துப்போவது நல்லது என்று தோன்றும்.
வியாபாரிகளுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வருமானம் மிகவும் குறைவு என்று உங்களுக்குத் தோன்றும்.
விஞ்ஞானிகளுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் அறியாமையின் தீவிரத்தை நீங்கள் உணர்வீர்கள்.
நல்ல ஆசிரியர்களுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் மீண்டும் மாணவனாக ஆசைப்படுவீர்கள்.
ஒரு விவசாயி அல்லது தொழிலாளிக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் போதிய அளவு கடினமாக உழைக்கவில்லை என்று உங்களுக்குத் தோன்றும்.
ஒரு சிப்பாய்க்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் சொந்த சேவைகளும் தியாகங்களும் அற்பமானவை என்று உங்களுக்குத் தோன்றும்.
ஒரு நல்ல நண்பனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வாழ்க்கை சொர்க்கம் என்று உங்களுக்குத் தோன்றும்!
நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கணவனை பார்த்து பேசிவிட்டு திரும்பிய மனைவி கடும் கோபத்துடன் சிறை அதிகாரிகள் இருந்த அறைக்கு சென்றாள்.
'என்னுடைய கணவர் இருக்கும் சிறைக்கு அதிகாரி யார்?'
வார்த்தைகளில் அனல் தெறிக்க கேட்டாள்.
ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்த வயதில் மூத்த அந்த அதிகாரி பதில் சொன்னார்,
'நான் தான்..! என்ன விஷயம்?'
அடுத்த நொடி அவள் பத்திரகாளியாய் மாறி ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தாள்,
'என்ன விஷயமா? இது சிறைச்சாலையா அல்லது சித்திரவதை கூடமா? என்னுடைய புருஷனை இப்படி கணக்கு வழக்கு இல்லாமல் கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கீங்க?
இதை நான் சும்மா விடமாட்டேன். மனித உரிமைகள் ஆணையத்திற்கு எடுத்துச் சென்று உங்கள் அனைவரின் வேலையையும் காலி செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பேன்'
அந்த அதிகாரி குழப்பமாய் கேட்டார்,
'ஏம்மா இவ்வளவு கோபப்படுற? அப்படி என்ன தப்பு நடந்து போச்சு?'
'என்ன தப்பு நடந்து போச்சா..? என் புருஷனுக்கு இவ்வளவு கடுமையான வேலையை கொடுத்து செய்யச் சொன்னா அவர் சீக்கிரம் செத்துப் போயிட மாட்டாரா?'
அதிகாரிக்கு மேலும் மேலும் குழப்பம் அதிகரித்தது. பதற்றமாய் பேசினார்,
'நாங்க எங்கம்மா உன் வீட்டுக்காரனுக்கு வேலை கொடுத்தோம்? வேளாவேளைக்கு நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு செல்லுல படுத்து உறங்கிக்கிட்டு தானே இருக்கான்'
அதிகாரியின் பதில் அவளை காண்டாக்கியது. பற்களை நறநறவன கடித்துக் கொண்டு சொன்னாள்,
'மனுஷத் தன்மையில்லாமல் பேசுறதுல போலீஸ்காரங்களை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவாரு. அது சரியாத்தான் இருக்கு.
வெறும் ஒரு அடி இரும்பு கம்பியை மட்டும் கையில கொடுத்து ஜெயிலுக்கு அடியிலிருந்து ஜெயிலுக்கு வெளியே இருக்கிற ரோடு வரைக்கும் இம்மி கூட சத்தம் வராமல் சுரங்க பாதை தோண்ட சொல்லி இருக்கீங்க.
மூணு மாசமா மனுஷன் படாத பாடுபட்டு தோண்டினதுல அவர் கையெல்லாம் சிவந்து புண்ணாகிப் போய் இருக்கு. பாதி தூரம் தான் தோண்டி இருக்காராம். இன்னும் மீது தூரம் தோண்டி வேண்டி இருக்குன்னு ரொம்ப சலிப்பா சொன்னாரு.
தோண்டுறதுக்கு அவருக்கு துணையா கூட ரெண்டு பேரை அனுப்பினா நீங்க என்ன குறைஞ்சா போயிருவீங்க?'
சிறைக்குள் இருந்து நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கணவன் மெல்ல மயக்கத்திற்கு தாவிக் கொண்டிருந்தான்.
ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்!
அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500₹ ஃபீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்த வில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000₹ தந்துவிடுவதாக விளம்பரம் செய்தார்.
விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000₹ ஆட்டய போடனும்
என்று நினைப்பில் அவரை சந்தித்தார்!
டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க அதற்கு அவர் டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்!
நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல !
பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது!
நர்ஸ் இவரிடம் 500₹ ஃபீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குண படுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்!
வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல !
பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500₹ கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார்.
இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000₹ வாங்கிவிடனும் என்று முடிவு செய்தார்.
இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து
விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குண படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000₹ என்று நோட்டை நீட்டினார்!
பணத்தை !
பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம் என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000₹ தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100₹ கொடுக்கிறீர்கள் என்று சொல்ல!
டாக்டர் சிரித்து கொண்டே சொன்னாராம் பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது.
நர்ஸ் இவர் கிட்ட 500₹ வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம்.