Feed Item
·
Added article

தமிழில் கவின் ஜோடி​யாக ‘ஸ்​டார்’ படத்​தில் நடித்​தவர் ப்ரீத்தி முகுந்​தன். மலை​யாளத்​தில் ‘மைனே பியார் கியா’, ‘சர்​வம் மாயா’ படங்​களில் நடித்​துள்ள அவர், ‘இத​யம் முரளி’, ஹரீஷ் கல்​யாணின் ‘தாஷமக்​கான்’ உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார்.

தெலுங்கு திரைப்​படங்​களி​லும் நடித்து வரும் அவர், இப்​போது இந்திக்​குச் செல்​கிறார். இவர் கார்த்​திக் ஆர்​யன் நடிப்​பில் உருவாகும் ‘நாகஸில்லா’ என்ற படத்​தில் அவருக்கு ஜோடி​யாக நடிக்க இருக்​கிறார். முதலில் இதில் நடிகை லீலா நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​பட்​டது. இப்​போது ப்ரீத்தி முகுந்​தன் தேர்வு செய்யப்பட்​டுள்​ளார்.

இப்​படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. நகைச்​சுவை​யுடன் கூடிய ஃபேன்​டஸி படமாக உருவாகும் இதில் கார்த்​திக் ஆர்​யன் இச்​சா​தாரி நாகமாக நடிக்கிறார்.

  • 136