Latest Cinema
- ·
- · sivam
ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக்கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக்கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.படப்பிட
- ·
- · sivam
ஒரு படபடிப்பில் சிவாஜி நடித்த ஒரு காட்சி படமாக்கப்பட்டது.காட்சி முடித்ததும் உடன் நடித்த நடிகர்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்கள்.ஆனால் சோ மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அனைவரும் கலைந்து சென்ற பின்பு சிவாஜி சோவை பார்த்து கேட்டார். ஏண்டா நீ மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கே என்றார்.சோ சொன்னார்...உண்மையை சொல்லட்டுமா சார்...நீங்க இன்று நடித்த நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங். அவங்கெல்லாம் உங்க கிட்டே நல்ல பேர் வாங்குறதுக்காக புகழ்றாங்க....என்றார்.சிவாஜி எந்த சலனமும் இல்லாமல் கேட்டு, இப்ப கவனி.நான் நடிச்சு காட்டுறேன் என்று எழுந்து நின்று நடித்தார்.மெல்லிய குரலில், உடலில் அதீதமான அசைவுகளின்றி எளிமையான ஆனால் ஆழமான முகபாவங்களில் நடித்து காட்டினார்.சோவால் நம்ப மு
- ·
- · sivam
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.*10. சட்டமுனி* – 800 வருடம் 1
- ·
- · sivam
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.கன்றுக்குட்டியானது ஓரிடத்தில் இருந்துகொண்டு தன் தாயை காணாமல் ‘அம்மெ’ என்று கத்தினால், அவ்வொலி தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு வேகமாக ஓடி வந்து கன்று பக்கத்தில் நிற்பது போலவே ‘நரசிம்மா!’ என்றழைத்தால் அக்கணமே தேடிவந்து அருள்புரிவான் என்று நரசிம்மரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் பொய்கையாழ்வார்.நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்ச நிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உட
- ·
- · sivam
வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.யார்கிட்டயும் கடனும்
- ·
- · sivam
சிவாஜிக்கு வசனம் எழுதுவது என்றால் எழுத்தாளர்களின் பேனாக்கள் அதிக மையை செலவழிக்கும்.மற்ற நடிகர்களுக்கு எழுதுவதை விட அதிக வார்த்தைகளை அவர்கள் தேடவேண்டியிருக்கும்.வார்த்தைகள் தான் வடிக்கப்படுகின்றன.சிவாஜி பேசும் போதுஅனலாய் தெறிக்கப்படுகின்றன.கஷ்டப்பட்ட தேடிய வார்த்தைகளுக்கு தங்கமுலாம் பூசியிருப்பார் நடிகர்திலகம் தன் நாவால்..பராசக்தி ..நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த என்ற சொல்லாடலில் அமைதியாக பயணிக்க ஆரம்பிக்கும் குணசேகரனின் நீதிமன்ற வாதம். பயனுள்ள அரசியல் தத்துவம் என்ற வார்த்தையை முடிக்கும் போது தமிழ்நாடு அதிர்ந்தது அன்றே.அந்த நீதிமன்ற காட்சியிலே சிவாஜியின் தனி மனித ஆட்சி தான்.இது சிங்கமடா! இதற்கு தீனி கொடுக்க புது மாமிசம்தான் படைக்க வேண்டும் என்று புறப்பட்டார்கள்வசன கர்த்தாக்கள்.புதிது புதிதாய்
- ·
- · sivam
கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் கே.சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட்டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீ்க?’’ என்றார்.அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்தரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை
- ·
- · sivam
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தத் திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் - கமல் இணைந்து இருந்ததால் ரசிகர்கள் படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க கூடிய கதையாக, எந்த ஒரு திருப்பமும் இல்லாமல், சுவாரஸ்யம் சிறிதும் இன்றி படம் இருந்தது. படத்தைப் பார்த்த பலரும் இது மணிரத்னத்தின் படம்தானா? என கேள்வி எழுப்பினர். மேலும் திரை விமர
- ·
- · sivam
அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகாடிங்.பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார்.பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார். அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை
- ·
- · sivam
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று மன்னார்குடி அருகே பிறந்த ராஜேஷ், ஆரம்பத்தில் கல்வி ஆசான் என்ற பணியைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் மனதுக்குள் ஏதோ ஒரு கலைவேட்கை. அதனால் தான் பலர் செய்யாத முடிவை அவர் செய்தார் – படம்பிடிக்கப்பட வேண்டிய மனிதராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.கே. பாலச்சந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" (1974) படத்தில் அறிமுகம். அதில் சிறிய பாத்திரம். ஆனால் அந்த பாத்திரமே அவரது அடையாளமாக மாறியது. பின்னர், "கன்னிப்பருவத்திலே" (1979) படத்தில் நாயகனாக வலம் வந்து ரசிகர்களின் மனங்களை வென்றார்.சினிமா மட்டுமல்ல, பல துறைகளில் அடையாளம்நடிப்புக்கு அப்பாலும் ராஜேஷ் பலதுறைகளில் தன்னை அடுத்தடுத்த பரிணாமங்களாக மாற்றிக்கொண்டார். உணவகம், நிலம் வாங்கும் வணிகம், சோதிடம் என பல துறைகளை அவர் ஆர்வமுடன் ஈர்த்துக் கொண்
