சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை பூனம் பாஜ்வா, தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்டி டவுசர் மற்றும் முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியான உடையில் எடுத்துள்ள போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்களில் Seval, Thenavattu, Romeo Juliet மற்றும் Jayikkira Kudhira ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். இந்த படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகம் தோன்றத் தொடங்கிய அவர், முத்தினகத்திரிக்காய், அரண்மனை 2 மற்றும் குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்தார். நடிப்பைத் தவிர சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தொடர்ந்து கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் சுமார் 40 லட்சம் ரசிகர்களை வைத்து இருக்கும் இவர், தற்போது கடற்கரை மணலில் குட்டி டவுசர், முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் "கிளாமர் குயின்" என வர்ணித்து வருகின்றனர். இந்த போட்டோவை அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
தற்போது பூனம் பாஜ்வாக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால், தொடர்ந்து இதுபோன்ற போட்டோக்களை பகிர்ந்து படவாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். அழகான திறமையான நடிகையான இவர், சரியான கதைகளை தேர்வு செய்ய தவறியதால், இவருக்கு படவாய்ப்பு குறைந்துவிட்டது.
