Featured News

நாட்டு மக்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள் இதோ:-● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு – 1909● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977●
Latest News

கனடாவின் ஒண்டாரியோவின் ஃபோர்ட் எரியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தனது வாடிக்கையாளர்களில் சிலரை சிகிச்சையின் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 59 வயதான இவோ இவானோவ் என்ற நபருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.தற்போது அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையாளர்கள், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தகவல் வைத்திருப்பவர்கள் நயாகரா காவல்துறையின் பாலியல் தாக்குதல் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

கனடாவின் புகழ்பெற்ற விஸ்கி வககைளில் ஒன்றான கிரவுன் ராயல், அதன் ஒரு தயாரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏனெனில், பாட்டில்களில் கண்ணாடி இருக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவை மையமாகக் கொண்ட விஸ்கி விநியோகஸ்தரான டியாஜியோ கனடா இன்க்., "கிரவுன் ராயல் ரிசர்வ்" பிராண்டின் "12 ஆண்டுகள் முதிர்ந்த" என்று பெயரிடப்பட்ட தயாரிப்பே இவ்வாறு மீளப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் காணப்படக்கூடிய சாத்தியங்கள் காரணமாக இந்த வகை விஸ்கி திரும்பப் பெறுகிறது.கனேடிய உணவு ஆய்வு முகமை (CFIA) வெளியிட்ட திரும்பப் பெறுதல் அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் ல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர், மற்றும் ஒன்டாரியோ ஆகிய பகுதிகளுக்கு விநியோ

கனடாவில் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் நோவா ஸ்கோஷியாவில் மருத்துவர் ஒருவர்பாலியல் குற்றச்ச செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கடந்த மே மாதம், நோவா ஸ்கோஷியாவின் அப்பர் நப்பன் பகுதியில் உள்ள கம்பர்லேண்ட் பிராந்தியத்தில் ஹெல்த் கேர் சென்டரில் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மருத்துவர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதுடன், நோவா ஸ்கோஷியாவின் அம்ஹெர்ஸ்ட் நீதிமன்றத்தில் நவம்பர் 15 ம் திகதி மீண்டும் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த மருத்துவரின் மூலம் மேலும் பாதிக்கப்பட்டவர்கள

கனடாவின் பசுமைக் கட்சியின் (Green Party of Canada) நீண்டகாலத் தலைவரான எலிசபெத் மே எதிர்வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதன் காரணமாக கட்சி மீண்டும் புதிய தலைவரைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சித் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக எலிசபெத் மே தெரிவித்தார். 2025 இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுக்கு பெரிய திட்டங்கள் வகுத்துள்ளோம் என மே தனது மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சிறிய நகரமான பெல்லா பெல்லாவிற்கு எலொன் மஸ்க் திடீர் விஜயம் செய்துள்ளார்.உலகின் முதனிலை செலவ்ந்தரான மஸ்க் இவ்வாறு திடீரென விஜயம் செய்துள்ளார். தனது பிரத்தியேக விமானத்தின் ஊடாக அவர் குறித்த கரையோர தீவு நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.டெஸ்லா மற்றும் எக்ஸ் தளம் என்பனவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக மஸ்க் திகழ்கின்றார். பெல்லா பெல்லா நகரில் மஸ்க் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். மஸ்க் தொடர்பில கனடாவில் மாறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏர் கனடா விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது கனடா தொழில்துறை உறவுகள் வாரியம்.ஏர் கனடா நிறுவனத்தின் விமானப் பணியாளர்கள் 10,000க்கும் அதிகமானோர் தங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஊதியம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்துக்கும் பணியாளர் யூனியனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த வேலைநிறுத்தத்தால், நாளொன்றிற்கு 130,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கனேடியர்களும் அடங்குவர். இந்நிலையில், ஏர் கனடா விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ள கனடா தொழி

ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட், கனடிய பிரதமர் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.ஒட்டாவாவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இன்று (ஆகஸ்ட் 18, 2025) ஒட்டாவாவில் சந்திப்பு நடத்துகின்றனர்.கூட்டாட்சி அரசு அதிகாரி ஒருவர், இந்த இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.கார்னி மற்றும் ஃபோர்ட், வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதி மற்றும் குற்றம் பற்றி விவாதிக்கவிருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஓர் சாதாரணமாக சந்திப்பு என முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கனடாவின் பிரதான விமான சேவை நிறுவனமான எயார் கனடா விமான சேவை நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று மாலை முதல் விமானங்களை மீண்டும் இயக்கத் தொடங்குவதாக அறிவித்தது.மொன்றியலை தளமாகக் கொண்ட எயார் கனடா, மத்திய அரசு நடுவர் மன்றத்தை உத்தரவிட்டு, விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப பல நாட்கள் ஆகலாம் என நிறுவனம் தெரிவித்தது.கனடா தொழிலக உறவுகள் வாரியம் பிற்பகல் 2 மணிக்குள் (ET) செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும், விமானப் பணியாளர்கள் தங்கள் கடமைகளை தொடரவும் உத்தரவிட்டதாக எயார் கனடா தெரிவித்துள்ளது.சனிக்கிழமை, கூட்டாட்சி அரசு, ஏர் கனடா மற்றும் அதன் பணியாளர்களை மீண்டும் பணிக்கு

கனடாவில் வீட்டு விற்பனையில் சாதகமான நிலைமை பதிவாகியுள்ளதாக கனடிய வீட்டுமனை ஓன்றியம் (CREA) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த2025 ஜூலையில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 6.6% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மாதங்களில் மந்தமாக இருந்த வீட்டுச் சந்தை மீண்டும் உயர்ந்து வருகின்றது. கடந்த ஜூலையில் மொத்தம் 45,973 வீடுகள் விற்கப்பட்டன. இது 2024 ஜூலையில் 43,122 காணப்பட்டது.கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையானது 3.8% உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வீடு விற்பனை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. குறிப்பாக டொரண்டோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனையானது 33.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நாகாலாந்து கவர்னரும் பா.ஜ., முன்னாள் தலைவருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80.தமிழக பாஜவின் முகமாக இருந்தவர் இல.கணேசன். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது கண்ணியமான பேச்சினை, பாஜ கட்சியினர் மட்டுமின்றி, பிற கட்சியினரும் ரசித்துக் கேட்பர். அந்தளவுக்கு நாகரிகமாக, நகைச்சுவையுடன் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் இல கணேசன். நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.கடந்த மாதம் சென்னை வந்த அவர், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார்.கடந்த 8 ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில் சென்னை ஆயிர

கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் 14ம் இலக்க வீதி மற்றும் மெக்வோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரின் நிலைமை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எயார் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை இரத்து செய்து வருகிறது. விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கனடாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா தனது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.இந்த 72 மணி நேர வேலை நிறுத்த மானது சனிக்கிழமை காலை 1 மணி முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஊதியங்கள் மற்றும் பிற கோரிக் கைகளை முன்வைத்து 10,000 விமான பணியாளர்களை பிரதிநிதித்துவம் கனேடிய யூனியன் ஆஃப் பப்ளிக் எம்ப்ளாயீஸ்க்கும், எயார் கனடா நிறுவ னத்திற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாததை தொடர்ந்து இந்த வேலை நிறுத்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.இந்த திட்டமிடப்படாத வேலை நிறுத்தம் காரணமாக தி