இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த தொழில்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் நிதானத்துடன் இருக்கவும். வரவுகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
ரிஷபம்
புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மிதுனம்
பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம்
நெருக்கமானவரிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தீர்வு காண்பீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சோர்வுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை பற்றிய சிந்தனைகள் மேம்படும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உருவாகும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் பகுத்தறிந்து செயல்படும் எண்ணம் உண்டாகும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
தனுசு
செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் மூலம் மாற்றம் பிறக்கும். உபரி வருமான குறித்த சாதகமான சூழல் உண்டாகும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனை புதிய நம்பிக்கையை தரும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் பிறக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதார தொடர்பான சிக்கல்கள் குறையும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
ஆரோக்கிய விஷயங்களில் பொறுமை வேண்டும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். கடன் செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். மற்றவர்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக செயல்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். கால்நடைகள் விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை