·   ·  10 videos
  •  ·  1 friends
  • 1 followers
  • 701
  • More

நயாகரா வீழ்ச்சி

Canada Day நயாகரா வீழ்ச்சி

Comments (0)
Login or Join to comment.
·
Added a news

கனடாவின் வன்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.

வன்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாக கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும். விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த விமானி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • 91
·
Added a news

 “இன்று இரவு, கனடியர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஒன்று கூடி, புத்தாண்டின் தொடக்கத்தை கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றாகச் சேர்ந்து, வரவிருக்கும் ஆண்டை வரவேற்கும் நேரமிது.

புத்தாண்டு முன்னிரவில், கடந்த ஆண்டில் நமக்கு மகிழ்ச்சியளித்த தருணங்களையும், அவற்றை சிறப்பாக்கிய நமது வாழ்வில் உள்ள மனிதர்களையும் நாம் நினைவுகூருகிறோம்.

இந்த ஆண்டு எமது நாட்டிற்கு பல சவால்களை கொண்டு வந்திருந்தாலும், நாம் ஒரு விசேடமான, தாராள மனம் கொண்ட, அக்கறையுள்ள தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அதிஷ்டம் என்பதையும் அது நினைவூட்டியுள்ளது.

நாம் ஒன்றுபட்டிருக்கும்போது, ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தும்போது, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும்போது தான் நாம் மிக வலிமையானவர்களாக இருக்கிறோம். அதுவே கனடாவை வலிமையான நாடாக உருவாக்குகிறது. இந்த ஆண்டு முடிவடையும் தருணத்தில், அதே ஊக்கத்தையும் அதே பெறுமதிகளையும்2026 ஆம் ஆண்டிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் உறுதி செய்கிறோம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள், கனடா.” என மார்க் கார்னி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  • 90

கோலம்.... போட்டுப் பாருங்க...

  • 91
·
Added a post

சுக்கை தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

ாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது. ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

  • 98
·
Added article

ஜானி படத்தில் இடம்பெற்ற ஆசைய காத்துல தூது விட்டு பாடலில் இவர் நடித்திருப்பார், இவர் யார் என தெரியுமா? தமிழ் தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கிய ஜெயசுதா, அதாவது பாண்டியன் படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக வரும் ஜெயசுதாவின் தங்கை ஆவார்.

இவரின் பெயர் சுபாஷினி, ஜானி படத்தில் இடம்பெற்ற அந்த ஆசைய காத்துல தூதுவிட்டு பாடல் இவருக்கு அதிகம் பெயர் வாங்கிக்கொடுத்தது.

இவர் 1980ல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த கரும்பு வில் என்ற படத்தில் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பழம்பெரும் நடிகையான விஜய நிர்மலாவின் மருமகளும் இவரே. தமிழ், மலையாளம், கன்னடம், தாய்மொழி தெலுங்கில் அதிகம் நடித்துள்ளார் சுபாஷினி.

இவரை அறிமுகப்படுத்தியது இயக்குநர் ஸ்ரீதர், இவர்தான் தனது அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் சுபாஷினியை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து நட்சத்திரம் , கொண்டாட்டம், பாய்ஸ் என சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் நடித்ததில் முக்கியமான திரைப்படம் கரும்பு வில் திரைப்படம்தான். நல்ல நடிகையான இவர் தெலுங்கில் நல்ல படங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் ஸ்ரீதரால் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் நறுக்கு சுறுக்குன்னு பெரிய பெயர் பெற்ற படங்களில் நடிக்காதது வருத்தமே. அவ்வப்போது இடைவெளி விட்டே இவர் தமி சினிமாவில் நடித்து வருகிறார்.

இன்றும் இவர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

  • 109
·
Added a post
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2026
  • 236
·
Added a post

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2026

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 1.1.2026.

இன்று இரவு 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி

இன்று இரவு 9:48 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

இன்று மாலை 04.18 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 09.36 வரை கௌலவம். பின்னர் இரவு 08.57 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று காலை 06.29 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=377&dpx=2&t=1767251552

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 12.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 249
  • 285
  • 292
  • 293
  • 294
  • 393

Happy New Year 2026 to all. Have happy & safe holidays

  • 395

Happy new Year

  • 401
·
Added article

சிந்தியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.

அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமானதாக இருக்கும்.

90-களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக முழுநீள ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்கத் தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.

இதில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றார். இந்தப் படம் ஜன.2-ம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

  • 503
·
Added article

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படமொன்றின் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பின்பும் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

’கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதன் மூலமே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • 509
  • 504
  • 506
  • 510
·
Added a post

பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் பழமையான, தொன்மையான விளையாட்டு.

இந்த விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.

தொன்மையான பரமபதம் [துணியில் வரையப் பட்டது]

பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் 12 இடம் உண்மையையும், 51 இடம் நம்பிக்கையையும், 57 இடம் பெருந்தன்மையையும், 76 இடம் ஞானத்தையும், 78 இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

41 கட்டத்தில் கீழ்ப்படியாமை, 44 கட்டம் அகந்தை, 49 கட்டம் ஈனம், 52 இடம் களவு, திருட்டு, 58 இடம் பொய், புரட்டு, 62 மதுபானம் அருந்துதல், 69 இடம் கடன், 73 இடம் கொலை, 84 கோபம், வெஞ்சினம், வஞ்சம், 92 கர்வம், 95 பெருமை, 99 காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம், அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கஷ்டங்களை கொடுக்கும்.

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க ''தாயம்'' அதாவது ''ஒன்று'' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார். நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப்பட்டது.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே....

1. முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டு விடும்.

2. இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.

3. இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து… பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.

4. இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.

5. பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்து விடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பற்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டு விடும்.

6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது.

7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி...

பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது. அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று ஸ்மியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… ராத்திரி எலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். [இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை]

இந்த பரமபதத்தின் இரகசியம் தான் என்ன….

மனதின் குணங்கள் 13....

1 . ராகம்

2 . துவேஷம்

3 . காமம்

4 . குரோதம்

5 . உலோபம்

6 . மோகம்

7 . மதம்

8 . மச்ச்சரம்

9 . ஈரிஷை

10 . அசூயை

11 . டம்பம்

12 . தர்பம்

13 . அஹங்காரம்

குணங்களை மாற்ற கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள்.

1 . சகுனம்

2 . ஸ்தோத்திரம்

3 . தியானம்

4 . யாகம்

5 . மெளனம்

6 . பக்தி

7 . சித்தி

8 . சிரத்தை

9 . ஞானம்

10 . வைராக்கியம்

இந்த 10 குணங்களையும் அவற்றை செம்மை படுத்தி நாம் பரவசு தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும் உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம். பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் படம்.

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம்.

1. அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று…

2. மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று…

3. இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர

4. மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம்.

5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

பரமபதம் அடைவது என்றால்…

1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று

2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து

3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான்

4.அதாவது இந்த உடலை விட்டு [வெளியிலே] விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி

5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

பரமபத சோபன படம் என்பது பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும், சோபிக்கும் படம்.

  • 519
  • 516
  • 517
  • 518
  • 519