- · 1 friends
-

வாய்விட்டு சிரித்தால்....
ஒரு பேச்சாளர் அன்று தான் பேச்சில் சிரிப்பின் அவசியத்தை பற்றி பேசினார்!
வந்திருந்த மக்களை பார்த்து நீங்கள் வீட்டில்
வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று பேசினார் !
இந்த பேச்சை கேட்டு விட்டு ஒருவன் வீட்டுக்கு போய் விட்டு மறு நாள் ! வந்து பேச்சாளரை .சந்தித்து !
ஐயா தங்களுக்கு நன்றி சொல்லி விட்டு செல்ல வந்தேன் என்று சொன்னார்!
பேச்சாளர் புரியாமல் என்ன நடந்தது என்று கேட்க!
அதற்கு சொன்னார் நீங்கள் நேற்று நீங்கள் பேசும் போது சொன்னீர்கள்!
வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று !
நீங்க சொன்ன மாதிரியே என் வீட்டுக்கு போனேன் வழக்கமான சண்டை நான் உடனே மனைவியை பார்த்து
வாய் விட்டு சிரித்தேன்!
அவ்வளவு தான் என் பெண்டாட்டி கோபித்து கொண்டு அவள் அம்மா வீட்டுக்கு போய் விட்டாள்!
மிக்க நன்றி ஐயா என்றாராம்!