Feed Item
·
Added article

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜமின்தாரின் மகன் என்பது பலரும் அறியாத தகவல்...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு தான் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர்

எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை RM.சோமுத்தேவர் அவர்கள் ஜமீன்தாராக இருந்தார்,

ஊர் மக்களால் RMS என்று அன்புடன் அழைக்கப்பட்டார்

அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது...

எம்.எஸ் பாஸ்கர் அப்பா சோமுதேவர் வள்ளல் போல் இருந்தவர். யார் உதவி கேட்டாலும் உடன் கொடுத்து உதவுவார்.

அந்த காலகட்டத்திலேயே 1965களில் வெள்ள கார் வைத்திருந்தார்..

இடும்பவனத்தில் தென்னை தோப்பு நில்ம்..வைத்திருந்தார்

எம்ஜிஆர் இவர் கிட்ட பணம் கேட்டு வாங்குவார் இவருக்கு பணம் தேவை என்றால் எம்ஜிஆரிடம் கேட்டும் வாங்குவார் அந்தளவுக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நெருங்கிய நட்பு இருந்தது

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த கூடிய ஒரே நபர் சோமுத்தேவர் தான் என்று இரு தரப்பினர் விரும்பியதாகவும், இதனை அடுத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடித்து வைத்துள்ளார்

கலைஞர் வீட்டுக்கு போனால் கலைஞர் வீட்டு வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து செல்லும் அளவுக்கு நெருங்கிய நட்பு

மணலி கந்தசாமி அவர்களிடம் நெருங்கிய நண்பர்

மாரியப்ப வாண்டையார்

முத்தையா செட்டியர்

புதுவை முதல்வராக இருந்த பாரூக் மரைக்காயர்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பட்டுகோட்டை நாடிமுத்து பிள்ளை...

அத்தி வெட்டி அய்யா உக்கடை தேவர்.

பூண்டிதுளசி அய்யா வாண்டையார் எல்லோரும் அவரது நட்பு வட்டம்....

இவர் பரம்பரை காங்கிரஸ் காரர் என்றாலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு நிதி உதவி செய்து அதிகமாக செலவு செய்தவர்

தஞ்சாவூர் ஜில்லா போர்டு தேர்தலில் நின்றார்...பஞ்சாயத்து பேசுவதில் வல்லவர்...மக்கள் மனதில் நின்ற வள்ளல்..

தன் மகன் பாஸ்கரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று சோமு தேவர், எம்.எஸ்.பாஸ்கரை நாகப்பட்டினத்தில் பள்ளியில் படிக்க வைத்தார், நாகையில் படிக்கும்போதே பாஸ்கர் நாடகத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு என்பது சிறுவயது முதலே ரத்தத்திலேயே ஊறி இருந்தது.

இந்த நிலையில் தான் 1971-ல் சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் மேற்ப்படிப்புக்காக சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னையிலேயே செட்டிலானார்.

சென்னை பச்சையப்பா கல்லூரியில்தான் எம்.எஸ்.பாஸ்கர் பட்டப்படிப்பு படித்தார். எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு சகோதரிகளும் டப்பிங் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தனது சகோதரியுடன் டப்பிங் செய்யும் ஸ்டூடியோவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சென்றபோதுதான் ஆண் குரலுக்கு டப்பிங் கொடுக்க வந்தவர் வரவில்லை என்பது தெரிய வந்தது. அப்போது எம்.எஸ்.பாஸ்கரை டப்பிங் குரல் கொடுக்க கூறிய போது அவர் ஒரே டேக்கில் அனைத்தையும் டப்பிங் செய்து முடித்ததை பார்த்து டப்பிங் கலைஞர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து அவருக்கு முதல் சம்பளமாக ரூபாய் 25 கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் பல படங்களில் டப்பிங் பேசினார். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யும் போது நகைச்சுவை கேரக்டர்களுக்கு பெரும்பாலும் எம்.எஸ்.பாஸ்கர்தான் குரல் கொடுத்திருப்பார்.

டப்பிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் எல்ஐசியில் வேலை பார்த்தார். ஒரு பக்கம் நாடகத்தில் இன்னும் நடித்துக் கொண்டிருந்தார்.

விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் அவர் காமெடி கேரக்டரில் நடித்தார்.

அப்போது அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில் பட்டாபி என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

இயக்குனர் பாலசந்தர் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தார்

காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அவர் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ’சிவகாசி’ படத்தில் காமெடி வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார்.

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு மிகச் சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்த படம் என்றால் ’உத்தம வில்லன்’ தான். கமல்ஹாசனுக்கு இணையாக அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். கமல்ஹாசன் மிகவும் அவரை பாராட்டி மகிழ்ந்தார்

எம்.எஸ்.பாஸ்கர் தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ’96’ திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்தார். அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார்..

செப்டம்பர் 13 தேதி 1957ல் ஜமீன்தாரின் மகனாக பிறந்து செல்வாக்காக வளர்ந்து இருந்தாலும் எந்த விதமான ஆடம்பரமும் இன்றி சாதாரணமாக இருப்பதுதான் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பு. அதேபோல் அவருடைய குடும்பத்தினரும் மிக எளிமையாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான குணசித்திர நடிகர் மட்டுமின்றி இவரது புகழுக்கு மணிமகுடமாக பெருந்தலைவர் காமராஜர் திரைபடத்தில் காமராஜர் பேசியது போலவே காதுகளில் ஒலிக்க செய்தவர் மதிப்புகுறிய எம் எஸ் பாஸ்கர் அவர்கள்.

அது மட்டுமல்ல தென் மாவட்ட நாடார்களின் பேச்சுகளையும் சென்னை பூர்வகுடி பேச்சுக்களையும் கோவை கவுண்டர்களின் கொங்கு தமிழ் பேச்சுக்களையும் அச்சி அசலாக பேசக்கூடிய அற்புத கலைஞர்.

இவரின் தமிழ் உச்சரிப்பு மேலும் பல பாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதில் வல்லவர்.

இவ்வளவு புகழுக்கும் சொந்தக்காரரான எம்‌எஸ்.பாஸ்கர் அவர்கள் பாஜக மூத்த தலைவரான பேட்டை சிவா அவர்களின் மாமா என்பது தனி சிறப்பு ஆகும்.

இவரது உடன் பிறந்தவர் மகன் மகள் பேரன் பேத்திகள் தம்பிக்கோட்டை கீழக்காடுட்டிலும், சென்னையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

  • 193