Category:
Created:
Updated:
இலங்கையில் நேற்றைய தினம் (12ஆம் திகதி) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 8,747 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.