சினிமா செய்திகள்
அரவிந்த்சாமி அவர்களின் 54 வது பிறந்தநாள் இன்று.
நடிகன் என்ற ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னர், எனக்கு இந்த அந்தஸ்து எல்லாம் தேவையற்றது என்று விலகி செல்ல முடியுமா? சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து என்பது அரசியல
மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு தமன்னா
அயன் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து தமன்னாவும் அதிக வரவேற்பை பெற துவங்கினார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தமன்னா நடித்து வெளிவந்த
படு கிளாமராக திரௌபதி சீலா
தமிழ்நாட்டில் உள்ள ஜெயம் கொண்டான் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவரான ஷீலா சிறு வயதிலிருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பல்வேறு நடன
’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க
பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் சபாபதி
ஒரு முறை அல்ல, பலமுறை பார்த்தும் சலிக்காத ஒரு படம் சபாபதி தான் . படத்தில் ஒரு காட்சியில் கூட சோகம் என்பதே இருக்காது. பழைய படம் என்றாலே ஒரே சோகமும், செ
காய்கறி விற்பனையாளர் காமெடியனான கதை  (அண்ணாச்சி)
சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சிஎன் ஊர் தூத்துக்குடி மாவட்டம் எரல். எனக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் காமெடியனாக நடிக்க வேண்டும் என்பது ஆச
கோட் படத்தின் ரிலீஸ் பாதிப்பு
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி,
குரலால் சினிமாவில் வெற்றி பெற்ற கல்லாப்பெட்டி சிங்காரம்
கவுண்டமணி மற்றும் செந்தில் காமினேஷன் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுடன் மூன்றாவது கூட்டணியாக இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் கல்லாப்பெட்டி சிங
தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான் - விஜய் சேதுபதி புலம்பல்
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா
நடிகை ஷில்பா ஷெட்டி மீது வியாபாரி புகார்
பாலிவுட் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர்.ரோமியோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிரபல தொழிலதிபர் ராஜ் க
தெகிடி திரைப்பட நடிகர் மர்ம மரணம்
தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நடித்த, நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், தமிழ் திரையுலகி
நடிகை சோனாக்ஷி சின்ஹா காதலனை கரம் பிடிக்கறார்
நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஜாகீர் இக்பால் என்பவரை இந்த மாதம் 23-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது. பிர
Ads
 ·   ·  376 news
  •  ·  0 friends
  • 1 followers

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயற்பட வேண்டும் - அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அத்துடன்இந்த உடன்படிக்கைகளின் படி செயற்படப் போகிறார்களா இல்லையா என்பதை ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளா ர். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

இதுவரை பல்வேறு தரப்பினரும் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி, அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், உள்ளிட்ட அரசாங்க சபைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எத்தனை தேவைகள் இருந்தாலும் 2024 வரவு செலவுத்திட்ட ஆவணத்தின் மூலம் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற முடியாது. கடந்த நான்கு தசாப்தங்களாக ஒரு அரசாங்கத்தின் அன்றாட அலுவல்களை மேற்கொள்வதற்குப் போதுமான வருமானம் இருக்கவில்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

2023ஆம் ஆண்டு அனைத்து வகையான வரிகளையும் அதிகரித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1550 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகள் மூலம் சுங்கத் திணைக்களம் 923 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது.

மதுவரித் திணைக்களம் 169 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் 20 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளதுடன், வரி அல்லாத வருமானம் 219 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

அத்துடன் 16 பில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைத்துள்ளது. பல்வேறு வைப்பு நிதிகள் மூலம் 304 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வழிகளிலும் பெறப்பட்ட மொத்த வருமானம் 3201 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருமானங்கள் மூலம் அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகள், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும போன்ற நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் கடன்களுக்கான வட்டி என்பவற்றைச் செலுத்த வேண்டும். அதற்காக 2023ஆம் ஆண்டில் மட்டும் 4.3 டிரில்லியன் ரூபா செலவாகியுள்ளன.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், அவர்கள் 2028 வரை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தங்களைப் பேண வேண்டும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டளவில், வெளிநாட்டு வள இடைவெளி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு போதுமானதாக இருக்காது.  கடந்த வருட அனுபவத்தின்படி அதற்கு 5018 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் எந்த அரசாங்கமும் இந்த நிதியை ஈடுசெய்ய வேண்டும். அதற்காக சர்வதேச நாணய நிதியம் 663 மில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்க இணங்கியுள்ளது.

அதன்போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் உடன்பாடு தெரிவித்துள்ள உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர்கள் செயற்படுவார்களா? இல்லையா? என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்காத எந்த ஒருவருக்கும் நாட்டின் எதிர்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வேறு மாற்றுவழி கிடையாது என்பதைக் கூற வேண்டும்” என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

  • 651
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads