சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  1355 news
  •  ·  0 friends
  • 1 followers

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வருவதாக ஏராளமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 900 க்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதல் நாள் நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்தன.

இதேநேரம் தபால் மூல வாக்களிப்பு இன்று மற்றும் நாளை நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் 04ஆம், 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்களுக்கு எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,095 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 1122
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads