ஐந்து வருடங்களாக தேங்கி கிடக்கும் வாகன கொள்வனவு உரிமங்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன
அரச அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் ஒழுங்குமுறைகள் மீதான விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நிதியமைச்சு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் அனுமதிப்பத்திரத்திற்கான வாகனங்கள் நிச்சயமாக வழங்கப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டிலேயே அரச ஊழியர்கள் மிகவும் ஆதரவற்ற குழுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளை வீதியில் அடித்துக் கொல்லும் யுகத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு இந்நாட்டு மக்கள் நன்றி காட்டுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்
000