சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  1355 news
  •  ·  0 friends
  • 1 followers

பிரதமர் தலைமையில் உருவானது புதிய அரசியல் கூட்டணியில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை தலைவராகவும் , அமைச்சர் ரொமேஸ் பத்திரன அவர்களை செயலாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி " எனும் பெயரில் ஆரம்பமான இந்தக் கூட்டணியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் பல கட்சிகள் பங்காளிகளாக அங்கம் வகிக்கின்றன.

கொழும்பு வாட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று நடைபெற்ற குறித்த முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஈபிடிபியின் தலைவர் என்றவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முக்கிய பங்காளியாக கலந்து கொண்டார்.

இதன்போது "ஒரு வெற்றி நாட்டிற்கு தைரியத்தின் சேர்க்கை" என்ற தொனிப்பொருளில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணி இன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த கூட்டணி உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன, ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அமைச்சர் டிரான் அலஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அரவிந்த குமார், தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் அசாத் சாலி, தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி சார்பில் சுகத் ஹேவாவிதாரண ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன,

”இது ஒரு வரலாற்று தருணம். சவால்களுக்கு மத்தியில், நாட்டிற்கு வெற்றியைக் கொண்டு வருவதற்கு நீங்கள் தொடர்ந்து பங்களித்துள்ளீர்கள். மேலும் எதிர்காலத்தை மீண்டும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளீர்கள். அரசாங்கங்கள் மற்றும் அரச தலைவர்களை உருவாக்கிய பாரம்பரியத்தில் நாங்கள் பங்காளிகள்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் பொது ஆணையின் மூலம் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டனர்.

முற்போக்கு தேசிய இயக்கத்திற்கு இந்நாட்டு மக்கள் வழங்கிய இரும்பு நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில், நாம் அந்தப் பெரும் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்த போது, நெருக்கடியான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக எமது ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினார்கள்.

அந்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நமது நாட்டை சமூக உறுதியற்ற நிலைக்கு மாற்றியது.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, உலகப் பொருளாதாரம் சரிந்தது. இன்றும் அது மீளவில்லை. இதில் எழுந்த பெரும் சவாலுக்கு தலைமை தாங்குவதற்காக 134 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தனர்.

சுதந்திர இலங்கையின் தந்தையாகக் கருதப்படும் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையில் இருந்து இன்று வரை கூட்டு அரசாங்கங்கள் இருந்துள்ளன. எனவே, ஒரு பகிரப்பட்ட அரசாங்கம் மற்றும் அரசியல் ஒற்றுமை ஒருமித்த கருத்து மூலம் மட்டுமே அடைய முடியும்.

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை நீங்கள் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்கும் வெற்றியாக மாற்ற நாங்கள் உழைத்து வருகிறோம்.

எதிர்காலத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை நாம் அறிவோம். எனவே தேசிய மற்றும் முற்போக்கு சக்திகள் கைகோர்க்கும் வகையில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் உருவாக்கத்தை இந்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகவே நாம் கருதுகின்றோம்.

நாங்கள் வேறு பாதையில் செல்லவில்லை. இந்த நாடு பயணிக்க வேண்டிய தேசிய மற்றும் முற்போக்கான பயணத்தில் சாமானியர்களுடன் கைகோர்த்து பயணித்துள்ளோம். அதற்கு ஆதரவும் பங்களிப்பும் தேவை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாடு வரலாறு காணாத அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டது. யுத்த காலத்தில் கூட சந்திக்காத அந்த பெரும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்த நாட்டின் ஜனநாயக மக்கள் வாக்குகளில் நம்பிக்கை வைத்து நாம் கைகோர்த்து உருவாக்கிய புதிய பலத்தின் அதே பலத்துடன் இன்று இந்தப் பயணத்தை ஆரம்பிக்கின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒழுக்கத்துடன் பணியாற்றுவதன் மூலம் ஒரு நாட்டை வழிநடத்துவதன் மூலம் உருவாக்கக்கூடிய முடிவு வேகமாக இருப்பதைக் கண்டோம். அராஜகமான, ஆட்சியின்றி இருந்த நாட்டில் ஒழுக்கத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றம் பிறந்தது.

நாம் உருவாக்கிய இந்த முன்னணியின் மூலம் ஒழுக்கமான நாட்டை கட்டியெழுப்ப உறுதியுடன் அர்ப்பணிப்போம். தீர்மானம் மிக முக்கியமானது. விமர்சனங்களுக்கு செவிசாய்ப்போம், உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவோம்.

நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் மக்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். இங்கே புதிய தலைமுறை நம்மைப் பார்க்கிறது. அந்த வருங்கால சந்ததிக்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம். ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

 

  • 824
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads