
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதுவருடன் நேற்று (29) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரைன் மற்றும் ரஷ்ய போரில் இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் ஈடுபடும் நிலையில், அதனை தடுப்பதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் காலத்தில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்லும் போது, அதற்கான அனுமதி இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் பெறப்பட்டுள்ளதா என்பதற்கான சான்றிதழை ரஷ்யா கோருவதற்கு இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000