சினிமா செய்திகள்
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
Ads
 ·   ·  1381 news
  •  ·  0 friends
  • 1 followers

வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் - சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவதி

யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ள காரணத்தால், திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை வழங்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இயந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களே விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதானல். அவர்களே பழுதுகளை சரி செய்ய ஊழியர்களை அனுப்பி வைப்பார்கள். இயந்திரங்கள் பழுந்தடைந்தமை தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அவர்கள் தமது ஊழியர்களை அனுப்பாதமையால் ,இயந்திரங்கள் திருத்தப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தூர இடங்களில் இருந்து வருபவர்கள், அவசர தேவை உடையவர்கள் ஒருநாள் சேவையை நாடுகிறார்கள். ஒருநாள் சேவைக்கான கட்டணங்கள் அதிகமாகும்.

தோம்பு ஒன்றினை ஒருநாள் சேவையில் பெற 200 ரூபாயும் சாதாரண சேவையில் பெறுவதற்கு 120 ரூபாயும் அறவிடப்படுகிறது.  அதேபோன்று உறுதி பிரதி ஒன்றினை ஒருநாள் சேவையில் பெற ஆயிரம் ரூபாயும் சாதாரண சேவையில் பெற 600 ரூபாயும் அறவிடப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அவசர தேவைக்காக, காலையில் ஒருநாள் சேவைக்கு விண்ணப்பித்து, மதியத்திற்கு பின்னர் அதனை பெற செல்லும் போது , இயந்திரம் பழுந்தடைந்து விட்டது என உத்தியோகஸ்தர்கள் கூறுவதால், சேவையை பெற சென்றவருக்கு வீண் அலைச்சலுடன் பணமும் நஷ்டமடைகிறது.

ஒருநாள் சேவையை பெறவே அதிக கட்டணம் செலுத்தும் நிலையில் மறுநாள் அவற்றை வழங்குவதால், அது சாதாரண சேவையாகவே கருதப்படும். ஆனால் ஒருநாள் சேவைக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்கும் நிலையும் இல்லை. 

இதனால் சேவைகளை பெற செல்லும் மக்கள் மாத்திரமின்றி சட்டத்தரணிகள் மற்றும் நொத்தாரிசுகள் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தி, பதிவாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு குறைப்பாடுகள் சிலவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேவை பெற வந்தவர்கள் கோரினார்கள்.

அதேவேளை யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்படப்படாமல் உள்ளமையால், திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கடும் வேலை சுமைகளுடன் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெற்றிடங்களை நிரப்புமாறு பதிவாளர் நாயக திணைக்களத்திடம் பல தடவைகள் கோரியும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அத்துடன் சில நேரங்களில் காகிததாதிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்வதில் கூட உத்தியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மழை காலங்களில் கீழ் தளத்தில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு.

யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களம் ஊடாக நாளாந்தம் சுமார் 3 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தினை பதிவாளர் திணைக்களம் பெற்றுக்கொள்கின்ற போதிலும், மாவட்ட திணைக்களத்தை வினைத்திறனுடன் மக்களுக்கு சேவை செய்வதற்குரிய வசதிகளை செய்து கொடுக்காது. தலைமை அலுவலகம் அசண்டையீனமாக காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகள், வள பற்றாக்குறைகள் தொடர்பில் தலைமை அலுவலகமான பதிவாளர் திணைக்களத்திற்கு பல தடவைகள் முறையிட்டும் எந்த பயனும் இல்லாத நிலையில், திணைக்களத்தின் 160 ஆவது ஆண்டினை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி பதிவாளர் நாயகமான டபிள்யு.ஆர்.ஏ.என்.எஸ். விஜயசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அவரிடம் நேரில் கோரிக்கைகளை முன் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளை நேரில் முன்வைத்த பின்னர், ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் மை குறிப்பிடத்தக்கது

000

  • 449
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads