Category:
Created:
Updated:
இலங்கை – கொரியா இடையிலான தொழில்சார் மற்றும் பயிற்சி வாய்ப்புகளுடன் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீக்குடன் கலந்துரையாடினார். கல்வி அமைச்சில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
கொரிய அரசாங்கம் தொழில்சார் பயிற்சி மற்றும் கல்வி புலமைப்பரிசில்களை வழங்கியமைக்காக, நன்றி தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்காலத்தில் சிறந்த கொரிய தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில் இலங்கையில் பயிற்சி வகுப்புகளை அமைப்பதில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.இதற்காக, எதிர்காலத்தில் கொரியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.