சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  2861 news
  •  ·  1 friends
  • 2 followers

முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் – இதுவே விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை தந்தது - ஜனாதிபதி ரணில்

முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும் அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(09) நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஒரு கடினமான நேரத்தில் பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். எந்த நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றினேன், அச்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இதேநேரம் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மீட்சித் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 300 ரூபாவை விட குறைக்க முடிந்ததோடு, அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சவாலான, கடினமான ஆனால் சரியான பாதையில் பயணிப்பதால் இந்த நிலையை அடைய முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் இதற்கு நிகரான எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தற்போது, ​​நாட்டின் பணவீக்கம் 1.5% வரை வீழ்ச்சியடைந்துள்ளதோடு பல ஆண்டுகளாக பற்றாக்குறையில் இருந்த முதன்மைக் கணக்கின் இருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்ற முடிந்தது.

பல தசாப்தங்களுக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளின் நடப்புக் கணக்கு உபரியாக உள்ளது. வட்டி விகிதம் 10% - 13% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  சவாலான மற்றும் கடினமான சாலையில் பயணிக்க முடிந்ததால் இந்த நிலைமை சாத்தியமானது.அத்தனை அவதூறுகளுக்கு மத்தியிலும் கொடிப் பாலத்தைக் கடக்க ஆரம்பித்து விட்டோம்.  மாநில வருவாயை அதிகரிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. எனவே நாட்டைக் கட்டியெழுப்ப யாராவது ஒரு மாற்றத்தைத் தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 493
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads