ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்
உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் ஜிமெயில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற புதிய மெயில் அம்சத்தை தொடங்க டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் மெயில் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் உலகின் மிக அதிகமானோர் ஜிமெயில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிமெயிலுக்கு போட்டி என்ற நிலையில் எக்ஸ் மெயில் அம்சத்தை எலான் மஸ்க் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ட்விட்டரை அவர் விலைக்கு வாங்கி எக்ஸ் என்ற பெயரில் நடத்தி வரும் நிலையில் அதே பெயரில் தற்போது மெயில் தொடங்க உள்ளார் என்பதும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஜிமெயில் சேவைகள் நிறுத்தப்படும் என்ற தகவல் இணையத்தில் வதந்தியாக பரவி வரும் நிலையில் அடுத்த கட்டமாக எக்ஸ் மெயில் தான் பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் ஒரு அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.