ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல்
தமிழக சட்டப்பேரவையிஆர்ல் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தமிழகத்தில் ஆட்சியை அமைக்கிறது. தமிழகத்தின் முதுலமைச்சராக முக ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அதில், கருணாநிதி கால ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த 14 பேர் என அனுபவம் வாய்ந்த 18 பேருக்கும், புதுமுகங்கள் 15 பேருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரம் :
ஸ்டாலின் – பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, உள்துறை
துரைமுருகன் – நீர்பாசனத்துறை
அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம்
ஐ பெரியசாமி – கூட்டுறவுத்துறை
கேஎன் நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை
அர. சக்கரபாணி – உணவுத்துறை
பொன்முடி – உயர்கல்வித்துறை
செந்தில்பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு
எவ வேலு – பொதுப்பணித்துறை
மா.சுப்ரமணியன் – சுகாதாரத்துறை
பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவளம்
கேகேஎஸ்ஏஎஸ் ராமச்சந்திரன் – வருவாய்
பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை
எம்ஆர்கே பன்னீர்செல்வம் – வேளாண்மை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை
குன்னூர் ராமச்சந்திரன் – வனத்துறை
மெய்யநாதன் – சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு
முத்துச்சாமி – வீட்டுவசதி
முபெ சாமிநாதன் – செய்தித்துறை
கீதா ஜீவன் – சமூக நலன்
சேகர் பாபு – இந்து சமயநிலைய அறத்துறை
தங்கம் தென்னரசு – தொழில்துறை
எஸ். ரகுபதி – சட்டம் மற்றும் சிறைத்துறை
மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
கயல்விழி – ஆதிதிராவிடர் நலத்துறை
மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பம்
எஸ்எம் நாசர் – பால்வளத்துறை
ராஜகண்ணப்பன் – போக்குவரத்து
திட்டக்குடி கணேசன் – தொழிலாளர் நலன்
மதுரை மூர்த்தி – வணிக வரி, பத்திரப்பதிவு
செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் நலன்
த.மோ. அன்பழகன் – ஊரக தொழில்துறை
ஆர். காந்தி – கைத்தறி
சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை